Jothimani: விஜய் எங்களுக்கு புதியவர் அல்ல! 2010லேயே காங்கிரஸில் இணைய வந்தார்- ஜோதிமணி பரபரப்பு தகவல்
கரூர்: காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல என்றும் அவர் 2010 ஆம் ஆண்டு ராகுலை சந்தித்து கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்றும் கரூர் எம்பி ஜோதிமணி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையோ விஜய்- ராகுலின் அண்மை சந்திப்பை மறுத்ததுடன் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையவிருந்த பழைய தகவலை கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கரூரில் அந்த தொகுதி எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "அவரிடம் காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தியை சந்தித்து விஜய் பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளதே" என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ஜோதிமணி பதில் அளிக்கையில், விஜய் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. 2010ஆம் ஆண்டு ராகுலை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
விஜய் புதியவர் அல்ல
அந்த இணைப்பு என்பது பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. எனவே விஜய் ஒன்றும் எங்களுக்கு தெரியாதவர் அல்ல. கரூர் கூட்ட நெரிசல் போன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடக்கும் போது தலைவர்கள் பேசுவது இயல்புதான். ஆனால் அதையே தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக சொல்லிவிட முடியாது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்ட காலமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே சமூகவலைதளங்களில் வருவதெல்லாம் அரசியல் கட்சிகளின் முடிவு என நாம் நினைக்கக் கூடாது. இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ராகுல் காந்தி, விஜய் சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது "நான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கிறேன். எனக்கு இது குறித்து எந்த தகவல்களும் தெரியவில்லை. யாரோ சில இது போல் உறுதிப்படுப்படாத செய்திகளை வெளியிட்டு தனக்கு பெயர் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
விஜய் ராகுல் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கூட பேசினேன். அவரும் "இது குறித்து தனக்கு தெரியாது" என்றார். விஜய்யுடன் ராகுல் சந்திப்பு என்பது எங்கள் கட்சித் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி சொன்னால் மட்டுமே அது அதிகாரப்பூர்வமானது என்றார். செல்வப்பெருந்தகையே விஜய், காங்கிரஸுக்கு பரிச்சயமானவர், 2010 இல் இணைய இருந்தார் உள்ளிட்ட தகவல்களை குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றை ஜோதிமணி கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக காங்கிரஸ்
தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வதாக ஒரு பேச்சு கடந்த காலமாக அடிப்பட்டு கொண்டே வருகிறது. அதிலும் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான போது , ராகுல் காந்தி, விஜய்க்கு போன் செய்து பேசி ஆறுதல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
கரூர் செல்லும் ராகுல்
அது போல் வெளிநாட்டில் இருக்கும் ராகுல், இந்தியா திரும்பியதும் கரூர் மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அப்போது அவர் விஜய்யையும் சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையான தகவல்களா என தெரியவில்லை.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் எஸ்ஐஆருக்கு எதிராக தவெகவினர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், "ராகுலும் விஜய்யும் கூட்டணி குறித்து பேசவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்" என கேட்டுக் கொண்டார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு?










Click it and Unblock the Notifications