கரூர் குளித்தலை ஆசிரியை ஸ்ருதிக்கு எமனாகிய கணவர்.. தவிக்கும் குழந்தைகள்.. ஷாக் வாக்குமூலம்
கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ருத் என்பவர் சென்னையில் வேலை செய்தபோது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஸ்ருதி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேறு ஒருவருடன் பழகியதாக சந்தேகப்பட்ட விஷ்ருத் செய்த செயல் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தை பார்ப்போம்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் விஷ்ருத் என்பவர், 27 வயதாகும் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ருதி சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்.அப்போது அங்கு வேலை செய்த விஸ்ருத் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

குடும்ப பிரச்சனை
இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். விஷ்ருத் கார் டிரைவராக குளித்தலை பகுதியில் வேலை பார்த்து வருகிறார். ஸ்ருதி திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி ஸ்ருதியை விஷ்ருத் அடித்தாராம்.
மருத்துவமனையில் சம்பவம்
பின்னர் அவரே தனது மனைவியை குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் புகுந்த விஷ்ருத் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன்தினம் இரவு குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த விஷ்ருத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.
வேறு நபருடன் பழக்கம்
அப்போது விஷ்ருத் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், "நானும் ஸ்ருதியும் சென்னையில் வசித்தபோது ஸ்ருதி, ஒரு ஆணுடன் பேசி பழகி வந்தார். இதனை அறிந்த நான் அவரை கண்டித்தேன். ஆனால் அவர் அந்த நபருடன் பேசுவதை கைவிடவே இல்லை. இதனால் ஸ்ருதியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துக்கொண்டு, எனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் பட்டவர்த்திக்கு வந்துவிட்டேன்.
வாக்குமூலம்
இங்கு வந்த பின்னர் என் மனைவி ஸ்ருதி வேறு ஒரு நபரிடம் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த நான், எனது மனைவி ஸ்ருதியை கண்டித்தேன். இதனால் எனக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுவந்தது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நான், அவரை தாக்கினேன். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஆத்திரம் தீராத நான் நேற்று முன்தினம் காலை அவரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டேன்" இ்வ்வாறு விஸ்ருத் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
யார் பொறுப்பு
மனைவி மீதான சந்தேகத்தில் அவரை தீர்த்துக்கட்டிய கணவன், சிறைக்கு போய்விட்டார். இப்போது அவரது இரண்டு குழந்தைகளின் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பாவம் அந்த குழந்தைகள், தாயை இழந்து, தந்தை சிறைக்கு போய்விட்ட நிலையில், அடுத்து உறவினர்களின் அரவணைத்தால் தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நிமிட கோபமும், பழிவாங்கும் உணர்வும் குடும்பங்களை அழித்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications