கிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்!
கிளி ஜோசியர் பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
குளித்தலை: கிளி ஜோசியரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் சங்கீதா, தன்னுடைய 5 குழந்தைகளையும் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஆத்துப்பட்டியை சேர்ந்த தம்பதி தங்கவேல் - சங்கீதா. இவர்களுக்கு பெரியநாயகி 13, பாண்டி மீனா 11, சந்தோஷ்குமார் 9, பொன்னர் 5, ரத்தினம் 3, ஆகிய 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.

சங்கீதாவுக்கு வயசு 29. கடந்த ஆண்டு தங்கவேலு மாரடைப்பால் இறந்துவிட்டார். அதனால் குழந்தைகளுடன் சங்கீதா தனியாக வசித்து வந்தார்.
இவர் வீட்டுக்கு பக்கத்தில் சங்கர் என்ற கிளி ஜோசியர் குடியிருந்தார். சங்கருக்கு வயசு 30. சங்கீதா தனியாக இருப்பதால், அடிக்கடி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை தந்துள்ளார்.
இதை வெளியில் சொன்னால் அசிங்கம் ஆகிவிடும் என்று பயந்து போன சங்கீதா ஊரையே காலி செய்து கொண்டு, கீழ வெளியூரில் வசிக்கும் அம்மா வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் சங்கர் விடவேயில்லை.. அந்த ஊருக்கும் துரத்தி கொண்டு வந்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.
இதனால் மனம் உடைந்த சங்கீதா தரிசு காட்டில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கீதாவின் தம்பி சதீஷ் தோகைமலை போலீஸில் புகார் செய்துள்ளதை அடுத்து சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தனைக்கும் இந்த கிளி ஜோசியர் சங்கருக்கு கல்யாணம் ஆகி மனைவி, 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். தொடர்ந்து இவரிடம் விசாரணை நடக்கிறது. ஆனால் 5 குழந்தைகளும் அம்மா இல்லாமல் தவித்து அழுவதை கண்டு கிராம மக்கள் கண்கலங்கி நின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications