திடீரென பூமியே நடுங்க.. கிருஷ்ணகிரி மக்களை அலற வைத்த நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.32 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
உலகளவில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் இயற்கைப் பேரிடர்களில், அபாயகரமானது நிலநடுக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் தற்போது இல்லை. அதேசமயம் நமது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. சென்னை மற்றும் வங்கக்கடல் பகுதியிலும் லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது உணரப்பட்டு உள்ளன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மக்களை இன்று அதிர வைத்துள்ளது நிலநடுக்கம்.
கிருஷ்ணகிரியில் இன்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் மக்கள் பூமி அதிர்ந்ததை உணர்ந்து அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் இன்று பிற்பகல் 1.32 மணியளவில் பூமியின் அடியில் 5 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களால் உணரப்பட்டது. கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications