ஓசூர் ஏர்போர்ட் புறக்கணிப்பு ஏன்? உ.பி.யில் ஆள் இல்லாமல் மூடப்பட்ட 6 விமான நிலையங்கள்.. கேள்விகள்
கிருஷ்ணகிரி: எங்கு விமான நிலையம் தேவையோ அங்கு அமைக்காமல், எங்கு தேவை குறைவாவோ அங்கு அமைப்பது எந்த வகையில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனெனில் அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் திறக்கப்பட்ட ஏழு விமான நிலைங்களில் ஆறு சேவையை நிறுத்திவிட்டது. ஆனால் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு வருவதை பலரும் விமர்சிக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் திறக்கப்பட்ட விமான நிலையங்களின் நிலை என்ன? மத்திய அரசு ஓசூருக்கு விமான நிலையம் அமைக்க மறுப்பது ஏன் என்று பார்ப்போம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் மட்டுமல்ல, அது ஒரு பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பகுதியாக உள்ளது. பெங்களூருக்கு பக்கத்தில் உள்ள இங்கு விமான நிலையம் அமைக்கக அரசு ஒரு பைசா செலவழிக்கத் தேவையில்லை பிபிபி மாடல் என்று சொல்லக்கூடிய தனியார் பங்களிப்பில் எளிதாக அமைக்க முடியும். ஆனாலும் மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. அதேநேரம் உத்தரப்பிரதேசத்தில் உடான் திட்டத்தின்படி, மத்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட ஏழு விமான நிலையங்களில் 6 நிலையங்கள் விமான சேவைகளை நிறுத்திவிட்டன.
தகவல் அறியும் உரிமை சட்டம்
இந்தியா டுடே செய்தி நிறுவனம் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவில் தான் உத்தரப் பிரதேசத்தின் விமான போக்குவரத்து வளர்ச்சியில் உள்ள பெரும் பின்னடைவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 2021-ம் ஆண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட 7 விமான நிலையங்களில், 6 நிலையங்கள் ஏற்கனவே தங்களது வணிக ரீதியான விமானச் சேவைகளை நிறுத்தி உள்ளன. அந்த ஏழு விமான நிலையங்களில் ஒன்றான அயோத்தி விமான நிலையம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது.
தரவுகள் சொல்வது என்ன?
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வழங்கிய தரவுகளின்படி, குசிநகர் விமான நிலையம் 2021 அக்டோபர் 20-ல் திறக்கப்பட்டு, நவம்பர் 26 முதல் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், 2023 நவம்பரில் அங்கு பயணிகள் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
அசம்கர், அலிகார், சித்திரகூடம், ஷ்ரவஸ்தி மற்றும் மொராதாபாத் ஆகிய விமான நிலையங்கள் பெரும்பாலும் 2024 மார்ச் மாதம் திறக்கப்பட்டன. ஆனால், ஒரு சில மாதங்களிலேயே அங்குச் சேவைகள் நிறுத்தப்பட்டன. அசம்கர் மற்றும் சித்திரகூடம் சுமார் 8 முதல் 9 மாதங்கள் மட்டுமே இயங்கின. மொராதாபாத் 3 மாதங்கள் மட்டுமே செயல்பட்டது.
ஷ்ரவஸ்தி மற்றும் அலிகார் நிலையங்களிலும் திறக்கப்பட்ட சில காலத்திலேயே சேவைகள் முடங்கின. இதில் அயோத்தி விமான நிலையம் விதிவிலக்காக 2023 டிசம்பர் 30-ல் திறக்கப்பட்டு, 2024 ஜனவரி 10 முதல் இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

குசிநகர் விமான நிலையம் மூடப்பட்டது ஏன்
குசிநகர் சர்வதேச விமான நிலையம் தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மார்ச் 2022-ல் மட்டும் மாதத்திற்கு 54 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், 2023-ம் ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. 2023 நவம்பரில் சேவை நிறுத்தப்பட்டபோது, அங்கு வெறும் 6 விமானங்கள் மட்டுமே இயங்கின. 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் பெரும்பாலான மாதங்களில் விமானங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே இருந்தது. நிதி ரீதியாகப் பார்த்தால், குசிநகர் விமான நிலையத்தைக் கட்ட சுமார் ₹327.30 கோடி செலவிடப்பட்டிருந்தது. விமானங்கள் இயங்காத நிலையிலும், அதன் பராமரிப்புச் செலவாக 2023-24-ல் ₹7.19 கோடியும், 2024-25-ல் இதுவரை ₹7.59 கோடியும் செலவிடப்பட்டிருக்கிறது.
கான்பூர்: ஒரு விதிவிலக்கு
புதிதாகத் தொடங்கப்பட்ட மற்ற இடங்களைப் போலன்றி, ஏற்கனவே விமான நிலையம் உள்ள கான்பூரில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அங்கு பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையம் 2023 மே 26-ல் திறக்கப்பட்டு, ஜூன் 7 முதல் சேவைகள் தொடங்கின. இது எந்தத் தடையுமின்றிச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் - டிசம்பர் 2023ல் 1,70,214 ஆக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 2024-ம் ஆண்டும் ஆண்டில் 2,89,577 பயணிகள் என்று உயர்ந்தது. 2025-ம் ஆண்டில் 3,64,075 பயணிகள் என்று எண்ணிகை
இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் கட்டுமானச் செலவு ₹122.14 கோடி ஆகும்.
ஆக்ரா விமான நிலையம் 2021-க்குப் பிந்தைய பட்டியலில் இல்லாவிட்டாலும், தொடர்ந்து விமான சேவை செயல்பாட்டில் உள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 2,39,758 பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள்.
ஒட்டுமொத்தப் பார்வை
இந்த ஆர்டிஐ தகவல்கள் உத்தரப் பிரதேசத்தின் விமானப் போக்குவரத்துத் துறையில் இரண்டு முரண்பட்ட நிலைகளைக் காட்டுகின்றன. ஒருபுறம், வணிக ரீதியாகத் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கும் புதிய விமான நிலையங்கள். மறுபுறம், கான்பூர் மற்றும் ஆக்ரா போன்ற தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் விமான நிலையங்களாக உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இவ்வளவு வேகமாக விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள திட்டமிடல், பயணிகளின் தேவை குறித்த மதிப்பீடு மற்றும் வழித்தடங்களின் லாபத்தன்மை ஆகியவற்றின் மீது இந்தத் தரவுகள் பல கேள்விகளை எழுப்பி உள்ளதாக இந்தியா டுடே ஆங்கில ஊடகம் ஆர்டிஐ தகவல்களை வைத்து விமர்சித்துள்ளது.
ஓசூரில் விமான நிலையம் அமையாதது ஏன்
இப்போது தமிழ்நாட்டிற்கு வருவோம்... ஓசூர் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் மட்டுமல்ல, அது ஒரு பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பகுதியாக உள்ளது. பெங்களூருக்கு பக்கத்தில் உள்ள இங்கு விமான நிலையம் அமைக்கக மாநில அரசு அல்லது மத்திய அரசு ஒரு பைசா செலவழிக்கத் தேவையில்லை பிபிபி மாடல் என்று சொல்லக்கூடிய தனியார் பங்களிப்பில் எளிதாக அமைத்துவிட முடியும். தனியார்களும் ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் ஓசூர் விமான நிலையம் மிகப்பெரிய வருமானம் தரக்கூடிய விமான நிலையமாக உருவெக்கும் என்ற கணிப்புகள் உள்ளது.
மத்திய அரசு சொல்லும் காரணங்கள்
இவ்வளவு பெரிய வாய்ப்பு இருந்தும் மத்திய அரசு அனுமதி வழங்க மறுக்க இரண்டு முக்கிய காரணங்களை கூறி வருகிறது. முதல் காரணம் ராணுவ விமானங்கள். ஓசூருக்கு மிக அருகில் பெங்களூருவின் எச்.ஏ.எல் விமான நிலையம் உள்ளது. இங்கு ராணுவ விமானங்கள் மற்றும் போர் விமானங்களின் சோதனை ஓட்டங்கள் தினமும் நடக்கின்றன. ஓசூரில் விமான நிலையம் அமைந்தால், அதன் வான்வெளி பாதுகாப்புப் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தற்போது மீண்டும் கைகாட்டியுள்ளது.
150 கி.மீ தூர விதிமுறை
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 150 கி.மீ சுற்றளவுக்குள் மற்றொரு புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைவதற்கு உள்ள இன்னொரு சட்ட ரீதியான சிக்கல் இதுதான்.. இந்த இரண்டு காரணங்கள் இருந்தாலும் தமிழக அரசு இதற்காகப் பிரத்யேகமாக 'வான்வெளி தளர்வு' கோரியது. ஆனால் பாதுகாப்புத் துறை அதை ஏற்கவில்லை. இது தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் உள்ளதாக ஓசூர் பகுதி தொழில் நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
தேவை இல்லாத இடங்களில் அரசு முதலீடு செய்து விமான நிலையங்கள் சும்மா கிடக்கின்றன. ஆனால், ஓசூர் போன்ற மிகப்பெரிய தொழில் முதலீடுகள் கொண்ட இடத்தில், தனியார் முதலீட்டில் வரத் தயாராக இருக்கும் திட்டத்திற்கு கூட மத்திய அரசு அனுமதி தரமறுப்பது நியாயம் இல்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள். அதேநேரம் அண்மையில் விமானத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அண்மையில், ஓசூர் விமான நிலையம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications