கிழிந்த ஆடைகள், உடலில் காயங்கள்.. தலைமறைவான பக்கத்து வீட்டுக்காரர்.. மூதாட்டிக்கு நேர்ந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பன்னந்தூர் தர்மதோப்பு பகுதியில் தனியாக வசித்து வந்த 71 வயது மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலில் காயங்களும், ஆடைகள் கிழிந்த நிலையிலும் உடல் மீட்கப்பட்டதால் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியை விட மோசமான சூழல் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக சிங்க பெண்கள் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. ஆனால் சிங்க பெண்கள் படைக்கு தனி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

Krishnagiri Woman

மூதாட்டி மர்ம மரணம்

இந்நிலையில், போச்சம்பள்ளி அருகே 71 வயது மூதாட்டி மர்மமான உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பன்னந்தூர் தர்மதோப்பு பகுதியில் குடிசை வீட்டில் 71 வயது சாமுண்டீஸ்வரி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கண்களில் காயங்களும், ஆடைகள் கிழிந்த நிலையிலும் உடல் மீட்கப்பட்டதால் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸார் விசாரணை

நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததாகக் கூறப்படும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சூரியகுமார் (30) தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+