கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட சென்னை ஆடிட்டர்.. பின்னணி என்ன?
கிருஷ்ணகிரி: சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும், கிருஷ்ணகிரி அடுத்த சாம்பல்பட்டி அருகே கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி. நேரில் ஆய்வு செய்துள்ளார்.
Recommended Video
கடந்த 26ம் தேதி சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜன ரஞ்சன் பிரதான் என்பவர் தொழில் நிமித்தமாக வாடிக்கையாளர் ஒருவரை பார்க்க வேலூர் சென்று வருவதாக மனைவி பூர்ணிமா என்பவரிடம் கூறிச் சென்றுள்ளார்.
ஆனால், அன்று இரவு அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தான் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரில் இன்ஸ்பெக்சன் செய்ய வந்து உள்ளதாகவும் தன்னுடன் தனது நண்பர் கிருஷ்ணகுமார், சபரீசன் மற்றும் சிலர் உள்ளதாக கூறியுள்ளார்.

காரில் சென்ற ஆடிட்டர்
மீண்டும் 27ம் தேதி காலை 10 மணி அளவில் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள, பூர்ணிமா முயற்சித்தபோது, தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், தனது கணவரின் நண்பரான அட்வகேட் பாலாஜி என்பவரிடமிருந்து ஸ்விப்ட் காரை கணவர் இரவல் பெற்றுச் சென்றதாகவும் போலீசில் பூர்ணிமா புகார் அளித்தார்.

ஜிபிஎஸ் ஆய்வு
இந்த நிலையில் காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி கொண்டு அமைவிடத்தை பார்த்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் மற்றும் பாரதி நகரில் கடைசியாக கார் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

போலீசில் புகார்
இது சம்பந்தமாக இரண்டு நாட்கள் தேடிப் பார்த்ததில் எங்கும் கணவர் கிடைக்கவில்லை எனக் கூறி, கிருஷ்ணகுமார் மற்றும் சபரிஷ் ஆகிய இருவர் மீதும் சந்தேகம் உள்ளது என்று பூர்ணிமா தெரிவித்தார். தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கூறியும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் பூர்ணிமா புகார் அளித்துள்ளார்.

ஆடிட்டர் உடல்
இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலைய எல்லை பகுதியான கோல்லபட்டி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஜன ரஞ்சன் பிரதான், புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய திருமால் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் அளித்த தகவலின்பேரில், சபரிசன், சிவன், கோபி, கிருஷ்ணகுமர், மணிவண்ணன். உள்ளிட்ட 5 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications