ஓசூர் அருகே ஊருக்குள் நுழைந்த சிறுத்தை... அச்சத்தில் உறைந்த பொது மக்கள்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராமத்திற்குள் சிறுத்தை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் யானை, கரடி, புள்ளிமான், சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட பல அரியவகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தேடி, வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள், அருகேயுள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையாக உள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, புலி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. பின்னர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கடுமையாக போராடி, வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதும், சிறுத்தையை போன்ற விலங்குகளை கூண்டு வைத்து பிடித்துச் சென்று விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த 29-ம் தேதி வெளியேறிய சிறுத்தை ஒன்று, ஓசூர் அருகேயுள்ள பைரப்பனஹள்ளி என்ற கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றித் திரிந்த அந்த சிறுத்தை, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவற்றில் மீது ஏறி நின்றது. பின்னர், அங்கிருந்து திரும்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் அக்கிராமத்திற்குச் சென்று சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை எப்போது பிடிப்பார்களோ என ஏங்கி காத்திருக்கும் அக்கிராம மக்கள், சிறுத்தையை பிடித்தால்தான் நிம்மதியடைவார்கள்.
இதுபோன்று, வனவிலங்குகள் ஊருக்குக்குள் புகுந்து பொதுமக்களை அச்சறுத்தும் சம்பவங்களுக்கு, தமிழக அரசு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்பதே மலைவாழ் கிராம மக்கள் மட்டுமின்றி அனைவரது விருப்பமுமாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications