நாடாளுமன்றம் கட்டவே 900 கோடி தான்.. தலைமை செயலகத்துக்கு 1,200 கோடியா.. தவெகவை வெளுத்த காளியம்மாள்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் நிலவுகிறது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் என ஏராளமான சர்ச்சைகள் வட்டமடிக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றம் கட்டவே 900 கோடி தான் செலவானது. இவர்கள் 1,200 கோடியில் மீனவர்களை காலி செய்துவிட்டு தலைமை செயலகம் கட்டுகிறார்கள் என்று அதிமுக காளியம்மாள் விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி காளியம்மாள், "என்ன கேட்டாலும் கஜானா காலி என்கிறார்கள். காசு இல்லை என்றே சொல்கிறார்கள். தலைமை செயலகத்தில் அவர் இருக்க மாட்டாராம். ஜோதிடர் ரத்தன் பண்டிட் சொல்லிவிட்டாராம். புதிய தலைமை செயலகத்தில் உட்கார்ந்தால் தான் நீ பிரதமர் என்று அவர் சொல்லிவிட்டார். அதனால் தான் புதிய தலைமை செயலகத்தை தலைமை செயலகத்துக்கு மாற்றியுள்ளனர்.

aiadmk-leader-kaliyammal-criticized-the-tvk-government-over-its-proposed-1-200-crore-new-secretaria

கடலோர மக்களை எல்லாம் காலி செய்துவிட்டு ரூ.1,200 கோக்கு தலைமை செயலகம் கட்டுகிறார்கள். நாடாளுமன்ற கட்டிடம் கட்டியதற்கே 900 கோடி ரூபாய் தான் ஆனது. கட்டுவது தான் கட்டுகிறீர்கள் ஒரு ஆஸ்பத்திரி வைப்பது போல கட்டுங்கள். ஏற்கனவே கட்டிய சட்டமன்றம் இப்போது ஆஸ்பத்ரியாக தானே இருக்கிறது. அந்த மாடலில் ஆவது நல்ல ஆர்கிடெக்சரிடம் கொடுத்து கட்டுங்கள். இது எப்படிப்பட்ட போக்கு. 1,000 ரூபாய் முதியோர் உதவி தொகை கொடுக்க காசில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை கொடுக்க காசில்லை.

ஆனால் 1,200 கோடியில் புதிய தலைமை செயலம். அவர் வீட்டில் இருந்து இப்போது சட்டமன்றம் வரை கஷ்டமாக உள்ளதாம். ஏர்போர்டில் சர்ரென்று வருவது போல, வேகமாக வந்து செல்வதற்கு வீட்டின் அருகிலேயே தலைமை செயலகம் கட்டுகிறார்கள். அவர் வீட்டில் இருந்து நேரடியாக தலைமை செயலகம் செல்வதற்கு வழியை உருவாக்குகிறார்கள். அறிவித்தபடி மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி கொடுக்க முடியவில்லை.

நீங்கள் யாரிடம் மாற்று நிர்வாகத்தை கொடுத்துள்ளீர்கள். மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. 8 மணி நேரம் எல்லாம் மின்சாரம் இல்லாமல் நிற்கிறார்கள். நான் முன்பு ரூ.1,500 முதல் 2,500 மின்சார கட்டணம் கட்டுவேன். அதிகபட்சம் கோடை காலத்தில் ரூ.3,000 கட்டுவேன். இப்போது சராசரியாக எல்லாரும் ரூ.6,000 மின் கட்டணம் செலுத்துகிறார்கள்.

எங்கள் பகுதியில் உள்ள மக்கள் லைன் மேன்களுடன் சண்டை போடுகிறார்கள். கடந்த மாதம் ரூ.2,500 கட்டினேன். இந்த மாதம் ரூ.5,000 கட்டணம் வந்துள்ளது. இதில் பாதி நாட்கள் நாங்கள் வீட்டிலேயே இல்லை என்று கேட்கிறார்கள். 100 நாட்களில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றம் இதுதான். 100 நாட்களில் 300க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகமாக நடந்துள்ளது. இது என்ன மாதிரியான நிர்வாகம். தவெக நமக்கு தண்டனை கொடுக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+