ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. டிரைவருக்கு கிருஷ்ணகிரி பெட்ரோல் பங்க் ஊழியர் தந்த மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடமும் கியூஆர் கோடில் ஸ்கேன் செய்வது போல் ஆக்சன் செய்து அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்ற வாகன ஓட்டுநரை, கம்பியுடன் ஓடிச்சென்று மடக்கி பிடித்துள்ளார் பங்க் ஊழியர். இதனால் பயந்து போன அந்த வாகன ஓட்டி, வேறு வழியில்லாமல் செல்போனை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருடர்கள் பல விதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் என்று இருக்கிறார்கள். அசந்தால் எதை வேண்டுமானாலும் திருடும் திருடர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சிசிடிவி கேமரா இருக்கிறதே நாம் மாட்டிக் கொள்வோமே என்ற சிந்தனையே இல்லாமல் திருடி விட்டு பின்னர் அசிங்கப்படுகிறார்கள். அதிலும் தொழில் முறை திருடர்களாக இல்லாமல், சமயத்திற்கு திருடும் திருடர்கள் தான் இப்படி சிசிடிவி கேமராவால் சிக்கி அசிங்கப்படுகிறார்கள்.

krishnagiri petrol bunk cell phone

தொழில் முறை திருடர்கள், திருடுவதற்கு முன்பு சரியாக திட்டமிட்டு திருடுகிறார்கள். அவர்கள் தடையங்களை விட்டு செல்வது குறைவு என்பதால் அவர்களை பிடிப்பதும் போலீசாருக்கு சவாலானதாக இருக்கும். அதேநேரம் உறவினர்கள், நண்பர்கள் யாராவது திருடினால், ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கையாக வசமாக மாட்டிக் கொள்வார்கள்..

அதேபோல் நம்மை விட எளியவர்கள், வயதானவர்கள், நமக்கு யார் என்றே தெரியாத சூழலில், அவர்கள் வசம் பணம், பொருள் இருந்தால், ஏமாற்றிவிட்டு பறித்து செல்வது அதிகமாக நடக்கின்றது.. அப்படித்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் செல்போன் பறித்துள்ளார் திருடன் ஒருவர். கடைசியில் அசிங்கப்பட்டார். கிருஷ்ணகிரி அருகே கடந்த ஞாயிறு அன்று நள்ளிரவு வேளையில் டீசல் போடுவதற்காக சரக்கு வாகனத்தில் மஞ்சள் டீசர்ட் அணிந்த ஒருவர் வந்துள்ளார். டீசல் நிரப்பிய பின்னர் பணம் அனுப்ப கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தார்.

பணம் அனுப்பிய பின்னரும் ஸ்கேன் செய்வது போல் ஆக்சன் செய்தவர், அங்கு பெட்ரோல் போடுவதற்காக நின்று கொண்டிருந்த வயதானவரின் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தனது வாகனத்தை நோக்கி ஓடினார். உடனடியாக வானத்தில் ஏறி ஸ்டார்ட் செய்த தப்பிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பியுடன் வாகனத்தை வழிமறித்த அவர் ஓங்கி அடித்தால் கண்ணாடி உடைந்து விடும்.

மரியாதையாக செல்போனை கொடுத்து விட்டு போ என்று பங்க் ஊழியர் மிரட்டினார். இதனால் பயந்து போன வாகன ஓட்டுநர் திருடிய செல்போனை வேறுவழியில்லாமல் கொடுத்துவிட்டு சென்றார். புதுப்பேட்டை படத்தில் வருவது போல் திருடிய வாகன ஓட்டுநருக்கு ஒரே அசிங்கமாக போச்சு.. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+