பேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை
காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video
கிருஷ்ணகிரி: ஃபேஸ்புக்கில் காதல்.. சம்பந்தப்பட்ட பெண்ணை ஏமாற்றி நாசம் செய்தது.. இது சம்பந்தமாக புகார் தந்தால் போலீஸ் கண்டு கொள்ளாதது.. கடைசியில் அந்த பொண்ணு தற்கொலை செய்து கொண்டது... என அப்படியே இன்னொரு பொள்ளாச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. இதை எல்லாம் செய்தவர் ஒருவரே.. அவரது சொந்த ஊர் பொள்ளாச்சியேதான்!
கிருஷ்ணகிரி ஜோதி நகரில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகள் ஒரு பிரைவேட் காலேஜில் படித்து வந்தார்.
பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவர் ஃபேஸ்புக்கில் பழக்கமானார். பழக்கம் நட்பானது.. நட்பு காதல் ஆனது.. காதல் இவர்களை தனிமையில் சந்திக்க சொல்லியது.. தனிமை விரைவில் கல்யாணம் செய்ய தூண்டியது... உன்னையே கல்யாணம் செய்துக்கறேன் என்று பாலன் சொல்ல.. அதை நம்பி மாணவி வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.

சர்ட்டிபிகேட்
இளம்பெண்ணை கோயமுத்தூருக்கு கூட்டி சென்று, ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து பெண்ணை சீரழித்தார் பொள்ளாச்சி பாலன். பலமுறை நாசம் செய்தபிறகு, திடீரென ஒரு சண்டையை போட்டார் பாலன். "கல்யாணத்துக்கு சர்ட்டிபிகேட்டுகளை ஏன் கொண்டு வரலை?" என்று பிரச்சனை செய்தார். கோவையிலிருந்து சேலத்துக்கு கூட்டிச்சென்று அங்கேயே நடுரோட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார் பாலன்.

போலீசில் புகார்
இப்போதுதான் பாலன் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த இளம்பெண், நேராக கிருஷ்ணகிரி போலீசில் புகார் தந்தார். ஆனால் போலீசாரோ, சம்பந்தப்பட்டவர் பொள்ளாச்சி என்பதால் அங்கே போயி புகார் அளிக்குமாறு சொன்னார்கள். அதன்படியே பொள்ளாச்சியிலும் வந்து புகார் தந்தார். அங்கே, கிருஷ்ணகிரி போலீசில் புகார் தருமாறு திருப்பி அனுப்பினார்கள்.

தற்கொலை
இப்படியே 2 மாசமாக கிருஷ்ணகிரிக்கும் பொள்ளாச்சிக்கும் போலீசார் இளம்பெண்ணை அலைக்கழித்தனர். கடைசிவரை புகாரும் எடுக்கவில்லை. ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி ஒருத்தனை நம்பி ஏமாந்து, சீரழிந்து, இப்போது ஒரு புகார் தந்தால்கூட எடுக்க மறுக்கிறார்களே என மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையே செய்து கொண்டார்.

வழக்கு பதிவு
மகளை பறிகொடுத்தபிறகு பெற்றோர் பாலன் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது. இப்போது மாணவியின் உடல் கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரியில் கிடக்கிறது!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications