பூட்டிய அறைக்குள் அத்துமீறிய சிவராமன்..ஒரிஜினல் மாஸ்டரே இல்லை.. என்சிசி தலைமையகம் கொடுத்த விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்பட 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்த நிலையில், சிவராமன் போலியான என்சிசி பயிற்சியாளர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்சிசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என என்சிசி தமிழக தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையான என்சிசியின் சிறப்பு முகாம் நடைபெற்றிருக்கிறது.

krishnagiri NCC crime

இந்த முகாமில் அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் அங்கே தங்கி பயிற்சி பெற்று இருக்கின்றனர். இந்நிலையில் அந்த முகாமின் பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சிவராமன் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை அதிகாலையில் தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் படிப்பு போய்விடும் என அந்த மாணவியை சிவராமன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி பள்ளியின் தாளாளர் சாம்சனிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என பள்ளி நிர்வாகம் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.

அதோடு அவருக்கு உடல் நல குறைவும் ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து மாணவியின் பெற்றோர் அவரை அழைத்து பேசியபோது தன்னை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததை கூறி இருக்கிறார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சிவராமன் தலைமுறைவானார்.

krishnagiri NCC crime

மேலும் பள்ளியில் நடத்திய விசாரணையில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதை அடுத்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரான சிவராமன், குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவராமன் விவகாரம் பெரிய அளவில் வெடித்த நிலையில் அக்கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் நேற்று கைதான நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை கைது செய்ய நான்கு தனி படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிவராமன் கோவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். போலிசார் நடத்திய விசாரணையில் சிவராமன் என்சிசி அதிகாரி இல்லை எனவும், போலியாக என்சிசி பயிற்சி முகாமை நடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என என்சிசி தமிழக தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக என்சிசி அளித்துள்ள விளக்க அறிக்கையில்,"கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போலி என்.சி.சி. நபர்களால் போலி என்.சி.சி. முகாமில் கலந்துகொள்ளும் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஊடகங்களில் இன்று செய்தியாக வெளியானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி.யில் பதிவு செய்த, எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான சிவராமன் என்ற நபருக்கும், என்.சி.சி-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. இந்தச் செய்தி ஒரு தெளிவற்ற தவறான தகவல் மற்றும் என்.சி.சி. பணியாளர்களின் ஈடுபாடு என தவறாக சித்தரிக்கப்பட்டு உண்மைகளை மறைக்கிறது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+