குடும்பத்தையே காவு வாங்கி இதய நோய்.. குழந்தை பலி, கணவன் மனைவி அடுத்தடுத்து விபரீத முடிவு
கிருஷ்ணகிரி : இதய நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 3 மாத குழந்தை பலியான வேதனையில் பெண் என்ஜினீயர் உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த சோகத்தில் காதல் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டுப்பட்டியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜலபதி. இவருக்கு வயது 30. இவர் லாரி ஓட்டுநராக கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா (25) என்பருடன் லாரி டிரைவர் ஜலபதிக்குகடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.
என்ஜினீயரிங் படித்திருந்த அபிசால்மியா, லாரி டிரைவர் ஜலபதியுடன் ஒரு கட்டத்தில் நன்றாக பழக தொடங்கினார். இருவருக்கும் இடையே இருந்த நட்பு சில நாட்களில் காதலாக மாறியது. காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனால் லாரி டிரைவர் ஜலபதியைத்தான் திருமணம் செய்வேன் எனறு தனது காதலில் தீவிரமாக இருந்த அபிசால்மியா கடந்த 2021-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து லாரி டிரைவர் ஜலபதி மற்றும் அபிசால்மியா ஜோடி, காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கோரினர். இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜலபதி அபிசால்மியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்களுக்கு அப்போது பெரும் அதிர்ச்சியான விஷயத்தை டாக்டர்கள் கூறினார்கள்.
குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் குழந்தைக்கு பல்வேறு மருத்துவனையில் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இதய நோய் குறைபாட்டால் குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துபோனது.
தனது குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசால்மியா யாரிடமும் பேசாமல் வேதனையில் இருந்த நிலயில், தொடர் மன அழுத்தத்தில் கடந்த 6-ந்தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம், மறுபுறம் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தற்கொலை என வேதனையில் இருந்த ஜலபதியும் விபரீத முடிவெடுத்தார். புதன்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த ஜலபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதயநோயால் மகள் இறந்து போனதால், கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டிருப்பது கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications