ஓசூரில் தடம்புரண்ட சரக்கு ரயில்.. பெங்களூரில் இருந்து சேலம் வந்தபோது விபத்து.. ரயில் சேவை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று திடீரென்று சரக்கு ரயில் தடம் புரண்டது. பெங்களூரில் இருந்து சேலத்துக்கு வந்து கொண்டிருந்தபோது சரக்கு ரயிலின் 18 வது டேங்கரின் சக்கரம் திடீரென்று தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் தடம் புரண்ட நிலையில் அதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் ஓசூர் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருபகுதியாக ஓசூர் உள்ளது. ஓசூர் வழியாக தமிழகம் - கர்நாடகா இடையே ரயில்கள் இயங்கி வருகின்றன. தினமும் ஏராளமான சரக்கு மற்றும் பயணிகள் ரயில் ஓசூரை கடந்து சென்று வருகின்றன.

hosur train railway

இந்நிலையில் தான் பெங்களூர் பானசவாடியில் இருந்து தமிழகத்தின் சேலத்துக்கு இன்று சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த சரக்கு ரயிலில் மொத்தம் 52 டேங்குகள் இணைக்கப்பட்டு இருந்தது.

இந்த ரயில் பெங்களூரில் இருந்து சேலம் புறப்பட்டது. ஓசூர் அருகே வந்தபோது திடீரென்று சரக்கு ரயிலின் 18 வது டேங்கர் என்பது தண்டவாளத்தைவிட்டு இறங்கியது. அந்த சரக்கு ரயிலின் 18வது டேங்கரின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை.

இதுபற்றி உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் விரைந்து வந்து ரயில் டேங்கை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் ஓசூர் அருகே புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தண்டவாளத்தின் மீது சரக்கு ரயில் பயணித்தபோது சரக்கு ரயில் தடம் புரண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சரக்கு ரயில் தடம்புரண்டதால் சில ரயில்களின் சேவைகள் என்பது இன்று பாதிக்கப்பட்டது. யஷ்வந்தபூர் - ஓசூர் மெமு (வண்டி 66585), ஓசூர் - யஷ்வந்தபூர் மெமு ரயில் (66586), ஓசூர் - யஷ்வந்தபூர் (66564) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் யஷ்வந்தபூர் - ஓசூர் (66563) ரயில் மாரநாயகனஹள்ளி - ஓசூர் இடையே ரத்து செய்யப்பட்டது. பெங்களூர் கண்டோன்மென்ட் - கோவை சந்திப்பு (20641) ரயில் மதியம் 2.20 மணிக்கு பதில் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+