2 கோடிக்கு ஓசூர் மாநகராட்சி பூங்கா நிலத்தை வாங்கி ஏமாந்த சேலத்துக்காரர்.. கண்டுபிடித்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பூங்கா இடத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்தாக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவர் பள்ளி மற்றும் விளையாட்டு திடலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை எப்படி விற்பனை செய்தார்கள் என்பது குறித்து சேலத்தை சேர்ந்த அமல அந்தோணிராஜ் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தான் என்ன நடந்தது என்பதை போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் தான் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொதுவாக பிளாட்டுகளை வாங்குவோர், வீட்டு மனைகளை வாங்குவோர், வாங்கும் நிலம் அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலமா, பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிலமா, அந்த நிலம் புறம்போக்கு நிலமா என்பதை முழுமையாக விசாரிப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று எண்ணி, முக்கிய பகுதிகளில் வில்லங்கமான நிலங்களை சிலர் வாங்கி அவஸ்தை படுகிறார்கள். சிலர் அரசையும் ஏமாற்றி நிலங்களை விற்கிறார்கள்.

Hosur -Allocated Park Land Salem Man Duped After Buying It for 2 Crore How Was It Exposed

எப்படி ஏமாந்தார்

குறிப்பாக பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை தவறாக ஆவணங்களை திருத்தி பொதுமக்களுக்கு விற்றுவிடுகிறார்கள். அந்த நிலத்தை வாங்கியவருக்கு பல ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது. அப்படியான சூழலில் ஒன்றும் செய்ய முடியாமல் நிலத்தை பறிகொடுக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். ஓசூரில் நடந்த சம்பவம் பற்றி விரிவாக பார்ப்போம்.

2 கோடி கொடுத்து வாங்கினேன்

சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்த அமல அந்தோணிராஜ் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆவலப்பள்ளி. இந்த பகுதியில் தங்களுக்கு 50 சென்ட் காலிநிலம் இருப்பதாக சந்திரபோஸ், அவரது மனைவி லூர்துமேரி ஆகியோர் எங்களிடம தெரிவித்தனர். இதையடுத்து அதில் 25 சென்ட் நிலத்தை நானும், எனது சகோதரி ஜான்மேரியும் சேர்ந்து ரூ.2 கோடி கொடுத்து கடந்த 2022-ம் ஆண்டு வாங்கியிருந்தோம்.


பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலம்

பின்னர் 2023-ம் ஆண்டு மேற்படி நிலத்தை மற்றொரு நபரிடம் விற்க முயன்ற போது தான் உண்மை தெரிய வந்தது. ஓசூர் சார்பதிவாளர், மேற்கண்ட இடத்தின் மீது மாநகராட்சி ஆணையாளரால் தடை மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே யாருக்கும் அந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது என்றார். அப்போது தான் இந்த நிலம் அறக்கட்டளை பெயரில் வைத்து மாநகராட்சி பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் என்றும், என்னை ஏமாற்றி விற்று விட்டனர் என்பதும் எனக்கு சார் பதிவாளர் மூலம் தெரியவந்தது. இதையடுத்து சந்திரபோஸ் மற்றும் லூர்துமேரியை அணுகி கேட்டபோது, தடை மனுவை 2 மாதத்தில் சரி செய்து விடுகிறோம் என்று கூறினார்கள். அப்படி முடியாவிட்டால் பணத்தை வட்டியுடன் திருப்பி தந்து விடுகிறோம் என்றனர்.


4 பேர் மீது வழக்கு

அமல அந்தோணிராஜ் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சந்திரபோஸ், லூர்துமேரி, வின்சென்ட் மகிமைராஜ், ஜெஷிந்தாமேரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலம் வாங்குபவர்கள் விஏஓவிடம் சென்று நிலத்தின் வகை, நிலம் என்ன பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை வாங்கினால் என்ன சிக்கல் வரும் என்பதை அறிய வேண்டும். நிலத்தின் வகையை அறியாமல் வாங்கினால், சிக்கல் தான் வரும். அது தான் ஓசூரில் நடந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+