நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. திமுக எம்.எல்.ஏ.வுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளி தோழன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திமுக எம்.எல்.ஏ. பிரகாஷுக்கு அவரது பள்ளிக்கால நண்பன் ஒருவர் இன்ப அதிர்ச்சிக் கொடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. எனக் கூறி எம்.எல்.ஏ. பிரகாஷை எல்லோர் முன்னிலையிலும் திக்குமுக்காட வைத்திருக்கிறார் அந்த நண்பர்.
உலகின் உன்னதமான உறவுகளில் ஒன்றாக கருதப்படும் நட்பை கொண்டாடாத மனிதர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.

ஒசூர் தொகுதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தளி பிரகாஷ். இதற்கு முன் தளி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்ததால் தளி பிரகாஷ் என கட்சியினரால் அழைக்கப்படுகிறார். திமுகவில் மாவட்டச் செயலாளராக இருக்கும் இவரைக் காண நூற்றுக்கணக்கில் கட்சியினர் அவரது வீட்டுக்கு வந்து செல்வார்கள். அதேபோல் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்டச் செயலாளர் என இரண்டு பதவிகளில் இருப்பதால் கட்சியினர் ஒரு மரியாதை காரணமாக சற்று தள்ளி நின்று பேசுவார்கள்.

ஆரம்பப் பள்ளி
அப்படித்தான் கடந்த வாரமும் கட்சியினரோடு பேசிவிட்டு கார் ஏறச் சென்ற திமுக எம்.எல்.ஏ. பிரகாஷிடம், நான் தான் கரியப்பா.. என்னை தெரியலையாப்பா.. எனக் கூறிக் கொண்டே ஒருவர் வந்து நின்றிருக்கிறார். இதைப்பார்த்த திமுகவினருக்கு பெரும் ஷாக். யாருப்பா நீ என அவரை அவர்கள் வினவுவதற்குள், பெலகொண்டபள்ளி கிராமத்தில் ஒன்றாக 5-ஆம் வகுப்பு வரை படித்ததை கூறி பிரகாஷ் எம்.எல்.ஏ.வுக்கு நினைவூட்டியிருக்கிறார் கரியப்பா.

நலம் விசாரிப்பு
இதையடுத்து வந்திருப்பது தனது தொடக்கப்பள்ளிக் கால நண்பன் கரியப்பா என்பதை அறிந்துகொண்ட பிரகாஷ் எம்.எல்.ஏ., உரிமையுடன் அவரது தோளில் கைபோட்டு நலம் விசாரித்தார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த கட்சிக்காரர்களும், மனு கொடுக்க வந்த பொதுமக்களும் யாருடா இது எம்.எல்.ஏ.விடம் இந்தளவு உரிமை எடுத்துக் கொள்கிறாரே என சற்று குழம்பிப் போனார்கள். ரஜினிகாந்த் நடித்த குசேலன் பட காட்சியை போல் இருந்தது அந்த நிகழ்வு.

நட்புக்கு முன்னால்
பணம், பதவி, பவுசு, மரியாதை எல்லாம் நட்புக்கு முன்னால் பூஜ்யம் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த நிகழ்வு அமைந்திருந்தது. இந்தக் காலத்தில் வி.ஐ.பி.க்களிடம் எதேச்சையாக ஒரு முறை அறிமுகமாகும் பலரும் அவரை எனக்குத் தெரியும், இவரை எனக்குத் தெரியும் நான் வேலையை முடித்துக் கொடுக்கிறேன் என உதார் விட்டுத் திரியும் நிலையில் கரியப்பாவை போன்ற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications