காட்டுக்குள் "உடம்பு".. கோயில் வாசலில் பெயிண்ட்டர் "தலை".. விடிய விடிய அலறிய பொதுமக்கள்..!
: பெயிண்டர் தலையை வெட்டி கோயில் வாசலில் எறிந்துள்ளனர்
கிருஷ்ணகிரி: பெயிண்ட்டரின் கழுத்தை அறுத்து, அதை தனியாக எடுத்து வந்து கோயில் முன்பு வைத்து விட்டு போயுள்ளனர் மர்மநபர்கள்.. தலை மட்டும் கிடைத்த நிலையில், உடலை தேடி போலீசார் அலைந்து திரிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ளது எழுவபள்ளி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் பிரதீப்.. இவர்தான் அந்த பெயிண்டர்.. 25 வயதாகிறது.
இவரது மனைவி பெயர் சந்திரிகா.. 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது...

கர்ப்பம்
இப்போது சந்திரிகா மறுபடியும் கர்ப்பமாக இருக்கிறார்.. பிரசவத்துக்காக அவரது அம்மா வீட்டுக்கு போயிருக்கிறார். இந்த நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு அந்த பயங்கரம் நடந்துள்ளது.. மர்ம நபர்கள் பிரதீப்பை கொடூரமாக கொலை செய்துவிட்டனர்.. அவரது தலையை துண்டித்து தனியாக எடுத்துள்ளனர்.. அதை கொண்டு வந்து, எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் முன்பு வைத்து விட்டு போயுள்ளனர்..

கோயில் வாசல்
அந்த வழியாக சென்றவர்கள், கோயிலில் வாசலில் தலையை பார்த்துவிட்டு, அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர்.. பிறகு போலீசாருக்கு தகவல் தெரிந்து அவர்களும் விரைந்து வந்து, நள்ளிரவில் அந்த தலையை கைப்பற்றி விசாரணையையும் ஆரம்பித்தனர். மற்றொரு புறம் அவரது உடலை தேடும் பணியும் ஆரம்பமானது. விடிய விடிய உடலை தேடினார்கள்.. இறுதியில் இன்று காலை 5.30 மணியளவில் மாரியம்மன் கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள கேழ்வரகு கொல்லை என்ற இடத்தில் மோப்பமாய் நின்றது..

போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் தேடியபோது பிரதீப்பின் உடல் கிடந்தது.. அதை போஸ்ட்மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையை காட்டுக்குள் செய்துவிட்டு, தலையை மட்டும் வெட்டி எடுத்து, ஊரிக்கு நடுவே உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்துவிட்டு போயிருப்பது தெரியவந்தது. ஆனால், யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.. எதற்காக இந்த கொலை என்றும் தெரியவில்லை.

கள்ளக்காதல்?
ஒருவேளை சொத்து பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. அல்லது கள்ளக்காதல் காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.. எனினும் கொலை குறித்து தொடர்ந்து பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் வாசலில் தலைகிடந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீயாய் பரவி, அங்கு பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டனர்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications