நான் நாம் தமிழர் கட்சி! பள்ளிகளில் மிரட்டி பணம் வாங்கிய என்சிசி சிவராமன்! மாணவிகள் சிக்கியது எப்படி?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர் அரசியல் கட்சிப் பதவியை வைத்து, தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.
கைது: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்ளிட்ட 9 பேர் அதிரடியாக போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பாலியல் வழக்கில் தேடப்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளியில் படித்த காலத்தில் என்.சி.சி. மாணவராக இருந்தபோது கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி, தனியார் பள்ளி, கல்லூரிகளில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளார் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன். புகாருக்கு உள்ளான கந்திகுப்பம் தனியார் பள்ளியில் என்.சி.சி. பயிற்சியளிக்க மாணவி ஒருவருக்கு தலா ₹1,500 வசூல் செய்துள்ளார் சிவராமன்.
அந்தப் பணத்தில் மாணவிகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள் வழங்கியுள்ளார். மேலும் சில கல்வி நிறுவனங்களிலும் போலியாக முகாம் நடத்தியுள்ளார் என போலீஸ்க்கு தகவல் கிடைத்துள்ளது. அரசியல் கட்சிப் பதவியை வைத்து, தனியார் பள்ளிகளை மிரட்டி பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார், சிவராமன் என கிருஷ்ணகிரி மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் கோபு தெரிவித்துள்ளார்.
பின்னணி: கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த சிவராமன், அப்பகுதியில் தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை (என்சிசி) பயிற்றுநராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் 12 வயது பள்ளி மாணவியை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இவர் முகாமில் பயிற்சியாளரான சிவராமன் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதிகாலையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அந்த புகாரை மறைப்பதற்காக ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகமே உடந்தையாக இருந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக கந்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மாணவி, தம்மிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சிவராமன் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து சிவராமன் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் மொத்தமாக 15 மாணவிகளை இவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறார். சிலரிடம் மோசமாக அத்துமீறியும் உள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்தவும், இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இவருக்கும் என்சிசிக்கும் தொடர்பு இல்லை.. இவர் என்சிசி நிர்வாகி இல்லை என்றும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications