சாந்தி மீது ஏகப்பட்ட சந்தேகம்.. சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. வாலிபரின் கொடூர செயல்
மனைவியை கொடூரமாக அடித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்
கிருஷ்ணகிரி: சாந்தி மேல இளையராஜாவுக்கு ஏகப்பட்ட சந்தேகம்.. அதனால்தான் சுத்தியால் அடித்தும் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் மிக கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் வசித்து வந்தவர் சாந்தி. இவர் கணவர் இளையராஜா. துபாயில் வேலை பார்க்கிறார்.

சாந்தி, இங்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்தி நடத்தி வந்தார். 15 நாளைக்கு முன்னாடிதான் இளையராஜா துபாயில் இருந்து வந்திருந்தார். இந்த பகுதிக்கு இப்போதுதான் புதுசாக குடி வந்திருக்கிறார்கள்.
வந்த நாள் முதல் ரெண்டு பேருக்கும் தினமும் சண்டை வந்து கொண்டே இருந்திருக்கிறது. நேற்று ராத்திரியுடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை. அதனால் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் சொன்னார்கள். அதன் பேரில் அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தால், சாந்தி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.
தலையில் பலத்த காயத்துடனும் அருகில் உள்ள ஜன்னல் கம்பியில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தவாறு சடலமாகவும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இளையராஜா எஸ்கேப் ஆகி இருந்தார். உடனடியாக இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்த அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.
சாந்தியின் தலையில் சுத்தியால் அடித்தும் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் இந்த பகுதிக்கு இப்போதுதான் குடிவந்துள்ளதால், இவர்களை பற்றி யாருக்குமே சரியான விவரம் தெரியவில்லை. அதனால் தப்பியோடிய இளையராஜாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications