"புன்னகை மன்னன்" பட பாணியில்.. மலை உச்சியில் இருந்து குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.. பரபரப்பு

கள்ளக்காதலர்கள் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கள்ளக்காதல் ஜோடி ஒன்று மலையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கப்பாளம்மா மலை உச்சியில் இருந்து கீழே குதித்து ஒரு ஜோடி தற்கொலை செய்து கொண்டதாக, சாத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்... அப்போதுதான், அவர்கள் 2 பேருமே கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.

டிரைவர்

டிரைவர்

இருவருமே கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தனா மற்றும் சதீஷ்குமார் ஆவர்.. சந்தனாவுக்கு 20 வயதாகிறது.. சதீஷ்குமாருக்கு 24 வயதாகிறது.. டிரைவராக வேலை பார்த்து வந்தார்.. இவர்கள் 3 வருட காலமாக காதலித்து வந்துள்ளனர்.. இந்த விஷயம் வீட்டில் தெரிந்துவிடவும், கடுமையான எதிர்ப்பை காட்டி உள்ளனர்.. கண்டித்தும் உள்ளனர்.. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் 2 பேரையும் பிரித்தும் வைத்ததாக கூறப்படுகிறது.

 திருமணம்

திருமணம்

எந்த நேரத்திலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்களோ என்ற கலக்கம் 2 பேரின் வீட்டிலுமே ஏற்பட்டது.. அதனால், அவசர அவசரமாக பெண், மாப்பிள்ளையை பார்த்து, வேறு வேறு நபர்களுடன் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்... ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் இவர்களால் ஒன்றி போக முடியவில்லை.. காதலையும் மறக்க முடியவில்லை..

தற்கொலை

தற்கொலை

அதனால், யாருக்கும் தெரியாமல் இவர்கள் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளனர். இப்படியே எத்தனை நாளைக்கு திருட்டுத்தனமாக பேசி கொண்டிருப்பது என்ற விரக்தியில், காதலனுடனேயே சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சந்தனா யோசித்தார்.. அதற்காக கணவனையும், குடும்பத்தையும் இழக்க தயாரானார்.. தன்னுடைய திட்டத்தை சதீஷ்குமாரிடமும் சொல்லி உள்ளார்.. அதற்கு அவரும் சம்மதித்துள்ளார்.

 பரபரப்பு

பரபரப்பு

அதன்படியே 2 பேரும் யாருக்கும் தெரியாமல் பெங்களூருவை அடுத்த ராம்நகருக்கு ஓடி வந்துள்ளனர்... அங்குள்ள கனகப்புராவில் உள்ள கப்பாளம்மா மலைப்பகுதிக்கு தற்கொலை செய்து கொள்ள சென்றுள்ளனர்.. இருவரும் கை கோர்த்தப்படியே மலை உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழக ஜோடி, கர்நாடகத்தில் பிணமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இது தொடர்பாக சாத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+