கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பார்த்த காதல் கணவரை மிளகாய் பொடி தூவி பயங்கரமாக கொன்ற இளம்பெண்
கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலனுடன் தகாத உறவில் இருந்ததை பார்த்ததால் காதல் கணவரை இளம்பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் குத்திக்கொன்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி: கள்ளக்காதலனுடன் தகாத உறவில் இருந்ததை பார்த்ததால் காதல் கணவரை இளம்பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் குத்திக்கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி, என்.தட்டக்கல்லை சேர்ந்தவர் கந்தன் (35). டைல்ஸ் வியாபாரி. சரக்கு ஆட்டோவும் சொந்தமாக வைத்திருக்கிறார். அதையும் ஓட்டி வந்தார். இவரது காதல் மனைவி சந்தியா (27). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கந்தன் வேலைக்காக அடிக்கடி சரக்கு ஆட்டோவில் வெளியே சென்று விடுவார்.
கடந்த திங்கள்கிழமை இரவு கந்தனின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்திருக்கிறார்கள். அங்கு கத்தியால் குத்தப்பட்ட கந்தன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை தூக்கி கொண்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கந்தன் பரிதாபமாக இறந்தார்.

எதற்காக கொலை
இதுதொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் விசாரணையில் இறங்கினார்க்ள. விசாரணையில், கந்தனை அவருடைய மனைவி சந்தியா, கள்ளக்காதலன் சிவசக்தி என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தியா, சிவசக்தி இருவரையும் கைது செய்து எதற்காக கொன்றார்கள் என்பதை கேட்டனர்.

அடிக்கடி வெளியூர்
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் , கந்தனை காதல் திருமணம் செய்து கொண்ட சந்தியா ஆரம்பத்தில் மகிழ்சசியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கந்தன் அடிக்கடி வேலைக் காரணமாக வெளியூருக்கு சரக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாராம். அப்போது சந்தியா வீட்டில் தனியாக இருந்து வந்திருக்கிறார். அந்த நேரம் அவருடைய வீட்டிற்கு என்.தட்டக்கல்லைச் சேர்ந்த சிவசக்தி (23) என்பவர் பால் பாக்கெட் வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

கணவனுக்கு தெரிந்தது
இதனால் சந்தியா-சிவசக்தி இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஊரில் பலருக்கும் தெரியவந்துள்ளது. அந்த தகவல் கந்தனுக்கும் போயிருக்கிறது. முதலில் நம்பாத கந்தன், மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் உள்ளதை கண்டு அவரை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார்.

கண்டித்த கணவன்
மனைவி அடிக்கடி செல்போனில் வேறுஒருவர் பேசுவதை கண்டுபிடித்த கந்தன், மனைவி சந்தியாவின் செல்போனை பிடுங்கி பார்த்துள்ளார். அவர் சிவசக்தியுடன் அடிக்கடி 'வாட்ஸ் அப்' வீடியோ காலில் சந்தியா பேசியது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கந்தன், சந்தியாவை கண்டித்ததுடன், கள்ளாகாதலை கைவிட்டு திருந்தி வாழும்படி எச்சரித்தார். ஆனாலும் சந்தியா கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கந்தன் வெளியூருக்கு வண்டியை எடுத்து செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

திடீரென வந்தார்
கணவர் வெளியூர் சென்ற உடன், சந்தியா கள்ளக்காதலன் சிவசக்தியை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சிவசக்தி, சந்தியா உடன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.இரவு 10 அளவில் திடீரென கந்தன் வேலைக்கு செல்லாமல் தனது வீட்டிற்கு வந்தார். அந்த நேரம் வீட்டில் சந்தியா, சிவசக்தியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கந்தன், தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் சிவசக்தியை அடித்திருக்கிறார்.

மிளகாய் பொடி
இதனால் அவமானம் அடைந்த சந்தியாவும் சிவகத்தியும், கந்தன் கொலை செய்ய முடிவு செய்தனர். சந்தியா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கந்தனின் கண்ணில் தூவி இருக்கிறார். சிவகத்தி கந்தனின் வாயை மூடியிருக்கிறார். சந்தியாவும் சிவகத்தியும், கந்தனை வீட்டில் காய்கறிகள் வெட்ட வைத்து இருந்த கத்தியை எடுத்து கழுத்து பகுதியில் பலமாக குத்தினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் கந்தன் சரிந்து விழுந்தார். பின்னர் ரத்த கரைகளை கழுவி விட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர். போலீசாரின் விசாரணையில் இந்த தகவல்கள் அனைத்தும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications