கிருஷ்ணகிரி பானுப்பிரியாவின் கள்ளக்காதல்.. கண்டுபிடித்த கணவன், மாமனார் இருந்த கோலம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை சாலையில் வேப்பனப்பள்ளி பகுதியில் நேற்றுமுன்தினம் வெவ்வேறு இடங்களில் 2 ஆண் உடல்கள் கிடந்தன.இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலை கண்டுபிடித்ததால் கணவர்-மாமனாரை இளம்பெண் பானுபிரியா தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பானுபிரியா போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கூறியது என்ன என்பதை பார்ப்போம்.
கிருஷ்ணகிரியில் மாவட்டம ராயக்கோட்டை சாலையில் உள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 ஆண் உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தது. நேற்றுமுன்தினம் இந்த சடல்களை போலீசார் கண்டெடுத்தனர். கொலையானவர்கள் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தியபோது, பெல்லாரம்பள்ளியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்குமார் (வயது 43), அவருடைய தந்தை முன்னாள் ராணுவ வீரர் செல்லப்பன் (62) என்பது தெரியவந்தது. அவர்கள் கொலை தொடர்பாக மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவிடம் (30) போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த பானுப்பிரியா, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவரையும், மாமனாரையும் கள்ளக்காதலன் யுவராஜுடன் (24) சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள். தொடர்ந்து போலீசார் பானுப்பிரியா, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுபற்றி பானுப்பிரியாவிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பானுப்பிரியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் வீட்டின் அருகே வேன் டிரைவராக உள்ள யுவராஜுக்கும், எனக்கும் திருமணத்தை மீறிய காதல் ஏற்பட்டது. என்னுடைய கணவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்ததால், நாங்கள் இருவரும் சந்தித்து கொள்வதில் சிரமம் ஏற்படவில்லை. தனிமையில் சந்தித்து பல முறை உல்லாசமாக இருந்தோம்.
எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் அரசல்புரசலாக ஊரில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. இது என் கணவர் மகேஷ்குமாரின் காதுக்கும் எட்டியது. இதனால் மகேஷ்குமார் கடந்த 3 நாட்களுக்கு முன்பு யாரிடமும் சொல்லாமல் திடீரென்று ஊருக்கு வந்தார். மேலும் யுவராஜுடன் உள்ள கள்ளக்காதலை கண்டுபிடித்து என்னை கடுமையாக கண்டித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை... வேறு ஒரு செல்போனில் இருந்து, கணவர் ஊரில் இருந்து வந்துள்ளார் என்று யுவராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். இதையும் கண்டுபிடித்து எனது கணவர், என்னை கண்டித்தார். இவர் இருக்கும் வரையில் நமது கள்ளக்காதலை தொடர முடியாது என எண்ணிய நான், இதுகுறித்து யுவராஜுக்கு தகவல் தெரிவித்தேன்.
பின்னர் கடந்த 10-ந்தேதி இரவு எங்களது வீட்டிற்கு கத்தியுடன் யுவராஜ் வந்தார். அப்போது வீட்டில் டி.வி.யில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய கணவரை, யுவராஜ் திடீரென கத்தியால் குத்தினார். கணவரது அலறல் சத்தம் கேட்டு மாமனார் செல்லப்பன் ஓடிவந்தார்.
அவரையும் யுவராஜ் கத்தியால் குத்த, நானும் மற்றொரு கத்தியால் 2 பேரையும் மாறி மாறி குத்தினேன். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்தனர். பின்னர் வீட்டில் இருந்த ரத்த கரைகளை துடைத்தோம். தொடர்ந்து அங்கிருந்த சாக்கு பை ஒன்றில் கணவர் உடலையும், இன்னொரு சாக்கில் மாமனார் உடலையும் கட்டினோம். வீட்டில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்னால் இருவரின் உடல்களை வைத்துக் கொண்டு நானும், யுவராஜும் புறப்பட்டோம்.
வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பாட்டில் பெட்ரோல் வாங்கி கொண்டோம். ஒரு இடத்தில் உடலை போட்டு தீ வைத்து எரித்தோம். தொடர்ந்து அங்கிருந்து சற்று தொலைவில் மற்றொரு உடலை போட்டு தீ வைத்து எரித்தோம். பின்னர் யாருக்கும் தெரியாததை போல நாங்கள் இருந்து கொண்டோம். ஆனாலும் ஊரில் 2 பேர் மயானத்தை வைத்து போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்" இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் பானுப்பிரியா கூறியுள்ளார்.
கைதான யுவராஜ், அவரது கள்ளக்காதலி பானுப்பிரியா ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலுக்காக கணவரையும், மாமனாரையும் இளம்பெண் கொலை செய்து அவர்களது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications