Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு! கிருஷ்ணகிரி நாதக மாஜி சிவராமனின் தந்தையும் பலியால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சிவராமனின் தந்தை அசோக்குமாரும் (61) பலியாகிவிட்டார். அவர் குடித்துவிட்டு கீழே விழுந்த போது தலையில் அடிபட்டதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

காவேரிப்பட்டினம் திருமண மண்டபம் அருகே அசோக்குமார் போதையில் விழுந்து கிடந்தார். அவருக்கு தலையில் அடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு பலியாகிவிட்டார்.

crime krishnagiri sivaraman

ஏற்கெனவே அசோக்குமாரின் மகனும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் முதலில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி.முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்தில் தங்கி இந்த முகாமில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் என்சிசி முகாமிற்கு சென்ற 12 வயது மாணவி கடந்த 8ஆம் தேதி பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அதிகாலை 3 மணிக்கு வந்த என்சிசி பயிற்சியாளர் காவேரிபட்டினத்தை சேர்ந்த சிவராமன் (30), அந்த மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியே சொன்னால், படிப்பே கெட்டுவிடும் என மாணவியை மிரட்டியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் சாம்சனிடம் அந்த மாணவி தெரிவித்த போது, அவரோ பள்ளி பெயர் கெட்டுவிடும், இதை வெளியே சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார். இதையடுத்து சோர்வாக இருந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போதுதான் இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சாம்சன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

சிவராமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சிவராமன் நாம் தமிழர் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் நேற்று அந்த குழு புலனாய்வு விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில் சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ஐஜி பவானீஸ்வரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், கைது செய்யப்படுவதற்கு முன்பாக சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

பாலியல் வழக்கு வெளியே வந்ததும் தான் கைது செய்யப்பட்டுவிடுவோம் என அஞ்சியே சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அது போல் சிவராமனின் தந்தை அசோக்குமார், நேற்று குடித்துவிட்டு சாலையில் நிலைத்தடுமாறி விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பலியாகிவிட்டார். மகன் இறந்ததும் தந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+