டிபன் வாங்க போன கிருஷ்ணகிரி கணவன்.. உடனே காதலனுக்கு பறந்த போன்! கொடூரத்தை காட்டி தந்த சிசிடிவி கேமரா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இந்த மரணத்துக்கு பின்னால் உள்ள காரணங்களும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் செய்த திட்டமும் அம்பலமாகி அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது.. என்ன நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்?
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது குண்டுகுறுக்கி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராஜகோபால்.. இவருக்கு 40 வயதாகிறது.. விவசாயம் செய்து வருகிறார்.

இவருக்கு ரூபா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ரூபா குண்டுகுறுக்கி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்த ஓட்டையனூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான நந்தகுமார் என்பவருடன் ரூபாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
நந்தகுமார் தம்பதி
நந்தகுமாருக்கும் ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாளடைவில் மனைவியின் இந்த கள்ளத்தொடர்பு பற்றி ராஜகோபாலுக்கு தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.. மனைவியை கண்டித்து எச்சரித்துள்ளார்... அட்வைஸ் செய்துள்ளார்.. இதெல்லாமே ரூபாவுக்கு எரிச்சலை தந்தது.. இதனால் கணவரை மொத்தமாகவே காலி செய்ய மனைவியும் கள்ளக்காதலனும் திட்டம் தீட்டினர்.
கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி இரவு, உடல்நிலை சரியில்லாமல் இருந்த மனைவி ரூபாவை ராஜகோபால் தனது பைக்கில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.. அங்கு சிகிச்சைக்கு முடிந்து மறுபடியும் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார். பிறகு வீட்டிலிருந்தவர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்காக ராஜகோபால் மறுபடியும் தனது பைக்கில் வெளியே புறப்பட்டு சென்றார்.
பைக்கில் சென்ற கணவர்
கணவர் தனியாக ஓட்டலுக்கு கிளம்பி செல்கிறார் என்ற தகவலை, ரூபா உடனடியாக தனது கள்ளக்காதலன் நந்தகுமாருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார்... உடனே நந்தகுமார் மறைந்திருந்து ராஜகோபாலை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சூளகிரி பவர் கிரிட் பகுதி அருகே ராஜகோபால் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரை நந்தகுமார் வழிமறித்து , கனமான இரும்பு கம்பியால் தலையிலும் உடலிலும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த கொலையை மறைப்பதற்காக, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து போல நந்தகுமார் சித்தரித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கதறி அலறி ஓடிய ரூபா
பிறகு, ரூபா தன்னுடைய டிராமாவை ஆரம்பித்தார்.. கணவர் பைக் விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லி, சூளகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு பதறியடித்து கொண்டு ஓடினார்.. புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். ஆனால், ராஜகோபாலின் மரணத்தில் விபத்துக்கான அறிகுறிகளை விட சந்தேகம்தான் அதிகமாக எழுந்தது.. அப்போதுதான் ரூபாவை பற்றின தகவல்களை போலீசார் சேகரித்தபோது,கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது..
காட்டி தந்த கேமரா
அப்படியானால் ராஜகோபால் எப்படி இறந்திருப்பார் என்ற அடுத்தக்கட்ட விசாரணையை விரிவுபடுத்தினார்கள்.. இதற்காக சம்பவம் நடந்த பவர் கிரிட் பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ராஜகோபாலை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கும் காட்சிகள் கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது அம்பலமானது.
இறுதியில் நந்தகுமாரைப் பிடித்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், உண்மையை ஒப்புக் கொண்டார். ஆனால், ரூபாவின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கொலையை செய்ததாகவும், விபத்து போல நாடகமாடியதும் ரூபா சொல்லித்தந்ததால்தான் என்பதையும் வாக்குமூலத்தில் கூறினார்.
பரிதாப பெண் குழந்தைகள்
இதையடுத்து, கொலையை செய்த நந்தகுமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி ரூபா ஆகிய 2 பேரையும் சூளகிரி போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இப்போது அப்பா கொலை செய்யப்பட்டு, அம்மா ஜெயிலுக்கு சென்ற நிலையில், அந்த 2 பெண் குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றன... அதேபோல நந்தகுமாரின் பெண் குழந்தைகளும் கண்ணீர் விட்டு பரிதவித்து வருகிறார்கள்.. பெற்ற பிள்ளைகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காத இந்த சுயநல தாய், தகப்பன்களை என்ன செய்வது??!!!


Click it and Unblock the Notifications
