அரசு பஸ்ஸின் முன்னாடி.. யார் நிக்கறதுன்னு பாருங்க.. கொஞ்சம்கூட அசையலையே.. திணறிய தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில், திடீரென நடந்த தர்மசங்கட சம்பவம், பெரும் பரபரப்பை தந்துவிட்டது.. யாரந்த பரிதாப பெண்?
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் எப்போதுமே பிஸியாக காணப்படும்.. ஓசூர், பெங்களூரு உட்பட, சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளுக்கும் இங்கிருந்து நிறைய பஸ்கள் சென்று வருகின்றன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் எந்நேரமும் இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வந்துசெல்வதாலும், பயணிகளின் நடமாட்டத்தாலும் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்..

இந்த நிலையில் இன்று காலை தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்புவதற்கு தயாரானது.. டிரைவரும் பஸ்ஸை எடுப்பதற்காக, சீட்டில் ஏறி உட்கார்ந்துவிட்டார்..
தலையில் கல்: அப்போது, திடீரென பஸ்ஸின் அருகில் ஒரு பெண் வந்து நின்றார். அவரது தலையில் ஒரு கல் இருந்தது.. அந்த கல்லை சுமந்துக்கொண்டு அப்படியே நின்றார்.. அவர் ஒரு மனநோயாளி என்று கூறப்படுகிறது.. பஸ்ஸின் முன்பகுதியில் நின்றுகொண்டு, பஸ்ஸையும் வழிமறித்து நின்றார்.. அந்த பெண்ணை நகர்ந்து நிற்கும்படி சொல்லியும் அந்த பெண் நகரவில்லை.. இதனால், டிரைவர் பஸ்சை இயக்கி செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது..
இதனால், அந்த பஸ்ஸில் இருந்து கண்டக்டர் கீழே இறங்கி முன்பகுதிக்குவந்து, அந்த பெண்ணிடம் சென்றார்.. பஸ் எடுக்க வேண்டும், சற்று தள்ளி நிற்குமாறு கூறினார்.. ஆனாலும் அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகரவில்லை, தலையில் இருந்து கல்லையும் எடுக்கவில்லை..
தலையில், கல்லை வைத்து கொண்டு, நீண்ட நேரமாக அப்படியே நின்றார். இதனால் பஸ்சில் ஏறிய பயணிகள், கண்டக்டர், டிரைவர் என மொத்த பேரும், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர்.
கண்டக்டர்: பிறகு அந்த பெண் மெல்ல வாய் திறந்தார்.. "காசு கொடு, அப்பதான் இங்கிருந்துபோவேன்" என்று அடம்பிடித்தார்.. அதுவரை திணறிக்கொண்டிருந்த கண்டக்டர், தன்னிடம் இருந்த சில்லரை காசுகளை அள்ளி அந்த பெண்ணுக்கு தந்தார்.. கை நிறைய காசு பார்த்ததுமே அந்த பெண் முகமலர்ச்சியுடன் சிரித்தார்.. பிறகு, அங்கிருந்து நகர்ந்து பஸ்ஸுக்கு வழியும் விட்டார். கண்டக்டரும், டிரைவரும், பஸ்சை அங்கிருந்து ஓட்டி சென்றனர்..
இந்த ஒரு பெண்ணால், பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் தவித்து போனார்கள்.. சிலர் அவசரமாக வெளியூர் செல்வதற்காகவும் அந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்திருந்தனர்.. இதுபோலவே, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிவதாக சொல்கிறார்கள்.
தொந்தரவு: இப்படி பஸ் ஸ்டாண்டில் வந்து நின்றுகொண்டு, பொதுமக்களிடம் டீ வாங்கி கொடு, சாப்பாடு வாங்கி கொடு, காசு கொடு என்று கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறப்படுகிறது.. அதனால், இப்படி சுற்றித்திரியும் மனநல பாதிக்கப்பட்டவர்களை, மாவட்ட நிர்வாகம் மீட்டு காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications