கிருஷ்ணகிரி பள்ளியில் தக்காளி சாதத்தை பார்த்ததும் கடுப்பான கலெக்டர்! ரேஷன் கடையில் இறங்கி.. செம

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் செய்த காரியம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதேபோல, ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவுத்துறை சார்பில் முக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக பொருட்களை வாங்கும் முறையே இப்போது மாற்றப்படுகிறது.. இதன் பின்னணியில் அமைச்சர் காந்திராஜ் மேற்கொண்ட ஆய்வில் சில முக்கிய விஷயங்களும் கவனம் பெற்றுள்ளன. அது என்ன?

நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இதுவரை இருந்த கூட்டு கொள்முதல் குழு முறை மொத்தமாகவே கலைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய இணையவழி கொள்முதல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

Krishnagiri Ration Collector

நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்கள்

இதில் பொருட்களை வழங்க விரும்பும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் வெப்சைட்களில் பதிவு செய்யலாம். பொருட்களின் விலை நிர்ணயம் முதல் கொள்முதல், தரப்பரிசோதனை, கூட்டுறவு கடைகளுக்கு அனுப்புவது வரை அனைத்தையும் இப்படி ஆன்லைனிலேயே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையில் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.. கூட்டுறவு சங்கங்கள் மட்டுமல்லாமல் சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்டோர் தயாரிக்கும் பொருட்களையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் அவர்களுக்கும் தொடர்ந்து பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

கொள்முதல் முறை - வெப்சைட்

இதற்காக மாநிலம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை கண்டுபிடித்து, அவர்கள் இணையவழி கொள்முதல் முறையில் எப்படி பதிவு செய்வது, வெப்சைட்டை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல கொள்முதல் செய்யும்போதும், பொருட்கள் கூட்டுறவு கடைகளுக்கு வந்து சேரும்போதும் தரத்தை பரிசோதித்து, தரமான பொருட்கள் மட்டுமே மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

இப்படி ரேஷன் பொருட்களின் தரத்தை கண்காணிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஆய்வு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.. போச்சம்பள்ளி அருகே "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது கீழ்குப்பம் கூட்டுறவு ரேஷன் கடையிலும் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார்

அப்போது ரேஷன் அரிசியில் பழுப்பு நிற அரிசி கலந்திருப்பது தெரியவந்தது. உடனே அந்த அரிசியை திருப்பி அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக தரமான புதிய அரிசியை பெற்றுக்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

அதேபோல கீழ்குப்பம் பள்ளியில் சமைக்கப்பட்ட தக்காளி சாதத்தை சாப்பிட்டுப் பார்த்தபோதும், அதில் பயன்படுத்தப்பட்ட அரிசி சரியாக வேகவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் பள்ளிக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தையும் முறையாக கவனிக்க வேண்டும் என கண்டித்தார்..

அதுமட்டுமல்ல, இதே ஆய்வின்போது புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடமலம்பட்டி பஸ் ஸ்டாப்பில் ஆதரவின்றி தங்கியிருந்த 3 முதியவர்களையும் அதிகாரிகள் கவனத்தில் கொண்டனர். அவர்களுக்கு முதலில் மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+