கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. பழைய ரூ.2000 நோட்டுக்கு ரூ.500 வேணுமா? திரண்ட பர்கூர்.. ஹைலைட்டே அங்கேதான்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதுகுறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூர் நகருக்கு செல்லும் வழியில் மேம்பாலம் ஒன்று உள்ளது.. இந்த பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது...

Krishnagiri rs2000 Mega Posters and exchanging 500 rupees instead of rs2000, what happened

போஸ்டர்: அதில், "2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும், அப்படி தேவைப்படும் நபர்கள் இதிலுள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு செல்போன் நம்பரும் தரப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.. கடந்த 2023 மே, 20ல், 2,000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் இந்த நோட்டீஸ் அவர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

போன் நம்பர்: எனினும், போஸ்டர்களை கண்ட பொதுமக்களில் சிலர், உடனடியாக அந்த நம்பருக்கு போன் செய்து பேசினார்கள்.. அப்போது எதிர்முனையில் பேசியவர், "2000 ரூபாய் நோட்டுகள் தந்தால், மூன்று 500 ரூபாய் நோட்டுகள் தருவேன்.. நோட்டுகளை மாற்றி தருவதற்கு எனக்கு 500 ரூபாய் கமிஷன் எடுத்துக் கொள்வேன்" என்று சொல்லி உள்ளார்.

இந்த விஷயம் அதற்குள் போலீசுக்கு போனது.. உடனே போலீசார், இதுகுறித்து விசாரணையில் இறங்கினார்கள்.. சம்பந்தப்பட்ட நபர், கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர்புரத்தை சேர்ந்த, சீதாராமன் என்பது தெரியவந்தது. 58 வயதாகிறதாம்.

பொங்கல் பண்டிகை: அதாவது, பொங்கல் பண்டிகையின்போது, வீட்டை சுத்தம் செய்தாராம்.. அப்போது, 2000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 4 கிடைத்ததாம்.. அதனை ரிசர்வ் வங்கியில் 500 ரூபாய் நோட்டாக மாற்றிய நிலையில், இதை வைத்து லாபம் பார்க்கலாம் என்று நினைத்து, போஸ்டர் அடித்து ஒட்டினாராம்.

இதில் ஹைலைட் என்னவென்றால் விசாரணை எல்லாம் முடிந்த பிறகு, "உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? இருந்தால் கொடுங்கள், நான் மாற்றித் தருகிறேன்" என்று போலீசாரிடமே கேட்டாராம் அந்த நபர்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், "இப்படியெல்லாம் செய்யக்கூடாது, 2000 ரூபாய்களை அரசு திரும்ப பெற்றுவிட்டது. இனிமேல் இப்படி துண்டு பிரசுரங்களை ஒட்டக்கூடாது என்று வார்னிங் தந்துவிட்டு போனார்களாம்.

நடவடிக்கை: ஆனால், இது சட்டப்படி தவறு என்கிறார்கள் வங்கி அலுவலர்கள்.. பழைய 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவது குற்றச்செயல் என்பதால், போலீசார் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.. இதையடுத்து, போஸ்டர் விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+