ரூ.7 லட்சம் வெள்ளை பணம்.. கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் சிதறிய கருப்பு நோட்டு.. சினிமாவை விட பயங்கரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்டு அருகில் ஒருவர் வேகமாக ஓடினார்.. அவரை துரத்திக் கொண்டு இன்னொருவர் பின்னாடியே ஓடினார்.. இதை கவனித்த போலீசார், இருவரையும் துரத்தி கொண்டு ஓடினார்கள்.. அவர்கள் இருவரும் ஏன் ஓடினார்கள்? அவர்களிடமிருந்த கலர் கலர் பாட்டில் என்னென்ன? போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது வெளிவந்த பகீர் தகவல்கள் என்ன? தெரியுமா? பெரும் பரபரப்பை இப்படியொரு சம்பவம் ஏற்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த யுவராஜ் என்பவர் ஆவகானப்பள்ளி பகுதியில் மாட்டுப்பண்ணையை நடத்தி வருகிறார்.. சில மாதத்துக்கு முன்பு, குந்தாரப்பள்ளி சந்தையில் மாடுகளை விற்க சென்றிருக்கிறார்..
அப்போது, நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த இதயகணேஷ் என்பவரை சந்தித்துள்ளார்.. அப்போது முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகியிருக்கிறார்கள்..

சந்தையில் நட்பு
ஒருநாள் இதயகணேஷ் யுவராஜிடம் பேசும்போது, தன்னிடமுள்ள கெமிக்கலை வைத்து, வெள்ளை பேப்பரை, ரூபாய் நோட்டுகளாக மாற்ற முடியும் என்றும் 1 லட்சம் கொடுத்தால் அதை டபுளாக்கி திருப்பி தருவதாகவும் சொல்லி, சத்தியமும் செய்திருக்கிறார்.. ஆனால், இதயகணேஷ் பேச்சின் மீது யுவராஜூக்கு நம்பிக்கை வரவில்லை..
வெட்டப்பட்ட வெள்ளை பேப்பர்
உடனே இதயகணேஷ், சில ரசாயனங்களை எடுத்துக் கொண்டு, யுவராஜின் மாட்டுப்பண்ணைக்கே சென்றிருக்கிறார்.. யுவராஜ் முன்னிலையிலேயே இதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, ரூபாய் நோட்டு சைஸுக்கு, ஒரு வெள்ளை பேப்பரை வெட்டினார்..
அதில், மருத்துவமனையில் உபயோகப்படுத்தப்படும் டின்ஞ்சரை தடவினார்.. உடனே வெள்ளை பேப்பர், கருப்பு நிறத்தில் மாற துவங்கியது.. பிறகு இதயகணேஷ், ஏற்கனவே கருப்பு நிறம் பூசப்பட்டு, மறைத்து வைத்திருந்த, நிஜமான ரூபாய் நோட்டை, யுவராஜுக்கு தெரியாமல் அங்கு மாற்றி வைத்துவிட்டார்..
பிறகு போட்டோ ஸ்டூடியோவில் பயன்படுத்தப்படும் ஹைப் (hype) என்ற கெமிக்கலை வைத்து, அந்த கருப்பு கலர் பேப்பரை கழுவியிருக்கிறார். உடனே அந்த பேப்பர், புது ரூபாய் நோட்டாக மாறியது..
ஒரு வெள்ளை காகிதம் கண்ணெதிரே, ரூபாய் நோட்டாக மாறிவிட்டதே என்று யுவராஜ் திகைத்து போய் நின்றார்.. பிறகு பணத்தை எப்படியாவது தயார் செய்து தருவதாகவும், அதனை இரட்டிப்பாக்கி தந்து விடும்படியும் இதயகணேஷிடம் சொல்லிவிட்டு சென்றார்.
7 லட்சம் பணம்
அதன்படியே கடந்த 21ம் தேதி யுவராஜ் 7 லட்சம் ரூபாய் பணத்தை தயார் செய்து, இதயகணேஷை பண்ணைக்கு அழைத்துள்ளார்.. இதயகணேஷூம் பண்ணை வீட்டுக்கு சென்று, பக்கெட்டில் கெமிக்கலை கலந்து, தன்னுடைய தகிடுதத்தம் வேலையை காட்டி, வெள்ளை பேப்பரை, வழக்கம்போல் கருப்பு நிறத்துக்கு மாற்றிவிட்டார்.
பின்னர், "8 மணி நேரம் சார்ஜ்ஜில் வெள்ளை பேப்பர் இருக்க வேண்டும், அதுவரை வெள்ளை பேப்பருக்குள் காற்று போகக்கூடாது, திறந்தும் பார்க்க கூடாது" என்று யுவராஜிடம் சொல்லி உள்ளார்.. இந்த 8 மணி நேரத்தில் எப்படியாவது 7 லட்சம் பணத்துடன் தப்பித்து ஓடவிடலாம் என்பதே இதயகணேஷ் திட்டமாக இருந்தது.
பண்ணையில் விருந்து
ஆனால், யுவராஜ் லேசில் விடவில்லை.. தன்னுடைய பண்ணையில் விருந்து வைப்பதாக சொல்லி, இதயகணேஷை எங்கேயும் செல்ல விடாமல் தன்னுடனேயே வைத்து கொண்டார்.. நன்றாக சாப்பிட வைத்தார.. 8 மணி நேரத்துக்கு இதயகணேஷிடம் பேசிக் கொண்டேயிருந்தார்..
8 மணி நேரம் முடிந்துவிட்டது.. இப்போது, சார்ஜில் போடப்பட்ட வெள்ளை பேப்பர், ரூபாய் நோட்டுகளாக மாறியிருக்குமோ? என்று சென்று பார்த்தார் யுவராஜ்.. ஆனால், வெள்ளை பேப்பர், அதே கருப்பு நிறத்தில் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டு
இதுகுறித்து யுவராஜ், இதயகணேஷிடம் கேட்டதற்கு, திடீரென அங்கிருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார்.. அப்போதுதான், இதயகணேஷை யுவராஜ் துரத்தி கொண்டு ஓடியிருக்கிறார்.. அப்போதுதான் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் போலீசார், இருவரையும் விரட்டி பிடித்துள்ளனர்..
இவ்வளவும் வாக்குமூலத்தில் சொன்னதையடுத்து, இதயகணேஷை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 6.90 லட்சம் பணத்தையும், வெள்ளை பேப்பர்கள், கெமிக்கல்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications