கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்களின் 28 வீடுகளுக்கு ஒரே நாளில் சீல் வைத்த அதிகாரிகள்.. குவிந்த போலீஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பல வீடுகள் உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உள்வாடகைக்கு விட்ட புகாரில் 28 பேருக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர் அதிகாரிகள். ஆனால் அவர்கள் வீடுகளை ஒப்படைக்காததால் நேற்று அதிகாரிகள் நேரடியாக சென்று அந்த குறிப்பிட்ட 28 வீடுகளுக்கு 'சீல்' வைத்தனர்.
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இருக்கிறது. இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 192 வீடுகள் உள்ளன. இங்கு அரசு அலுவலர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிவோருக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் வீடுகள் இருக்கிறது.. தற்போது 150 வீடுகளில் அரசு அலுவலர்கள் வசித்து வருகின்றனர். 42 வீடுகள் காலியாக இருக்கின்றன.

இதில் பல்வேறு வீடுகள் உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து வீடுகளில் ஒதுக்கப்பட்டவர்கள் குடியிருக்கிறார்களா? என்று கடந்த மார்ச் மாதம் ஓசூர் வீட்டு வசதி வாரிய பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
அப்போது 28 அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை உள் வாடகைக்கு விட்டிருந்தது வீட்டு வசதி வாரிய பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஓசூர் பிரிவு சார்பில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியது. ஆனால் நோட்டீஸ் அளித்து ஒரு மாதம் ஆகியும் யாரும் வீடுகளை காலி செய்யவில்லை.
இதையடுத்து நேற்று வீட்டுவசதி வாரிய ஓசூர் பிரிவு செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி வருவாய் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் அங்கு சென்றனர். அத்துடன் உள்வாடகையில் வசித்தவர்களின் பொருட்களை எடுக்கச்சொல்லி 28 வீடுகளுக்கும் 'சீல்' வைத்தார்கள்.
அப்போது, எங்களால் உடனே வீடுகளை காலி செய்ய இயலாது. ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள் என வீடுகளில் குடியிருந்தவர்கள் அதிகாரிகளிடம் கேட்டனர். கடந்த மாதமே வீடுகளில் உள் வாடகைக்கு இருப்பவர்களுக்கும், வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விட்டோம். பின்னர் எதற்காக நீங்கள் காலி செய்யவில்லை? என பதில் கேள்வியை அதிகாரிகள் எழுப்பியதுடன், அவகாசம் அளிக்க மறுத்துவிட்டனர். சீல் வைக்கும் நடவடிக்கையின் போது ஓசூர் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications