கிருஷ்ணகிரி முதியவர் கொலையில் திடுக் தகவல்! நிர்வாணமாகவே வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்! யார் அவர்?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதியவரின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் நிர்வாணமாகவே வந்ததாக சொல்லப்படுகிறது.
ஊத்தங்கரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி, இவருக்கு 75 வயதாகிறது. இவர் தனது மனைவியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இருவரும் விவசாயம் பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதியவர், நிலத்திற்கு காவலாக வெளியே படுத்துக் கொண்டிருந்தார்.

அவரது மனைவி வீட்டின் உள்ளே படுத்திருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நிர்வாணமாக தோட்டத்து வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை கல்லால் அடித்து தாக்கியுள்ளார்.
இதனால் அந்த முதியவர் வலியால் அலறியுள்ளார். அந்த நபரையும் தடுக்க முயன்றார். அப்போது கணவரின் அலறல் சப்தம் கேட்டு மனைவி கதவை திறந்து வெளியே வந்தார். உடனே அந்த மூதாட்டியை இந்த மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டாராம். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவரையும், மூதாட்டியையும் ஊத்தங்கரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மூதாட்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிராமம் என்பதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொலையாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் மூதாட்டி சொன்ன அடையாளங்களை வைத்து பிடிக்க போலீஸார் தேடி வருகிறார்கள்.
வயதான தம்பதியை தாக்கி முதியவரை கொன்றது மட்டுமல்லாமல் மூதாட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அந்த தம்பதிக்கு மகன், மகள்கள் இருக்கிறார்களா என்ற விவரமும் தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் நடந்த கொடூர கொலைகளை காணலாம்.
நவம்பர் 2024: திருப்பூர் மாவட்டம் செமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்ட வீட்டில் தனியாக வசித்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமத்தாள் (74), மகன் செந்தில்குமார் (44) ஆகிய மூவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர். நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில் 2025 மே மாதம் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு சம்பவத்திலும் ஈடுபட்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர்.
மே 2025: ஈரோடு மாவட்டம் விளங்காட்டு வலசு (அல்லது மேகரையன் அருகே சிவகிரி) கிராமத்தில் தோட்ட வீட்டில் தனியாக வாழ்ந்த ராமசாமி (72), பாக்கியலட்சுமி (63) தம்பதியர் கொலை செய்யப்பட்டனர். 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது. மூன்று பேர் கைது; அவர்கள் முந்தைய திருப்பூர் மூன்று கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள்.
மார்ச் 2025: ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தில் லூர்துசாமி (70) மற்றும் அவரது மனைவி தனியாக வசித்த வீட்டில் கொலை செய்யப்பட்டு, வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இரட்டைக் கொலை சம்பவமாக விசாரணை நடைபெற்றது.
பிப்ரவரி 2026: சென்னை புரசைவாக்கம் அரசப்பா தெருவில் தனியாக வசித்த 61 வயது பாலகிருஷ்ணன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications