Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

35 வயசுல ஓசூர் மஞ்சுளாவின் விபச்சாரம்.. கிருஷ்ணகிரி வி.ஐ.பி.யால் வந்த வினை! கனவிலும் நடக்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஹரிஷ் என்பவரின் கொலையானது, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. படுகொலை செய்யப்பட்டவர் ஓசூர் அதிமுக பிரமுகர் என்பதால், இந்த வழக்கின் விசாரணை மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. இதில் மஞ்சுளா என்ற பெண் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.. அவரிடம் தொடர் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாரசந்திரத்தை சேர்ந்தவர் ஹரிஷ்.. அதிமுக பிரமுகரான இவருக்கு 32 வயதாகிறது.. டிரைவர் வேலை பார்ப்பவர்.. அத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.. அத்துடன் வட்டிக்கு பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலும் செய்து வந்தார்.

Krishnagiri Hosur Manjula

ஹரிஷ் - பெண்கள்

இந்நிலையில், கடந்த 3-ந் தேதி ஹரிஷை யாரோ கொடூரமாக கொன்றுவிட்டார்கள்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டபோதுதான், ஹரிஷின் கள்ளக்காதலி மஞ்சுளா என்ற பெண்ணின் பெயர் அடிபட்டது.

35 வயதுடைய மஞ்சுளா, கூலிப்படையை சேர்ந்த 9 பேரை வைத்து இந்த கொலையை செய்துள்ளதும் தெரியவந்தது.. எனவே ஹரிஷை ஏன் மஞ்சுளா கொலை செய்தார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். ஆனால், போலீசாரே எதிர்பாராத வகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை மஞ்சுளா கூறினாராம்..

மஞ்சுளா - வட்டிக்கு மேல் வட்டி

அதாவது மஞ்சுளா திருமணமானவர்.. ஆனால் கணவரை பிரிந்து வாழ்கிறார்.. இளம்பெண்கள் பலரை வைத்து, விபச்சார தொழிலும் செய்து வந்திருக்கிறார்.. அப்போதுதான் ஹரீஷூக்கும், மஞ்சுளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

கணவரை பிரிந்து தனிமையில் வாழ்வதால், ஹரிஷை தனக்கு துணையாக மஞ்சுளா வைத்து கொண்டாராம்.. ஹரிஷூடன் சேர்ந்ததுமே, விபச்சார தொழில் மட்டுமல்லாமல், வட்டிக்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலையும் கற்றுக் கொண்டு, அதையும் மஞ்சுளா செய்ய துவங்கினார்.. இதனால் வட்டிக்கு மேல் வட்டி விட்டு, மஞ்சுளா ஏகப்பட்ட பணத்தை அள்ளினார்.

தனக்கு கடன் நிறைய இருப்பதால், பணம் தந்து உதவுமாறு மஞ்சுளாவிடம் ஹரிஷ் கேட்டுள்ளார்.. கடன் மட்டும் தீர்ந்துவிட்டால் நாம் இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்றும் சொல்லி உள்ளார்.. இதையடுத்து, ரூ.80 லட்சம் வரையில் மஞ்சுளாவிடம் வாங்கியிருக்கிறார் ஹரீஷ்.

விபச்சாரத்தில் மஞ்சுளா கைது

இப்படிப்பட்ட சூழலில்தான், கஸ்டமராக வந்த மோனீஷ் என்பவருடன் மஞ்சுளா பேசி வந்திருக்கிறார்.. இது ஹரீஷூக்கு பிடிக்கவில்லை.. எனவே மோனிஷாவை கண்டித்தார்..

பிறகு, கடந்த டிசம்பரில் விபச்சார கேஸில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தார் மஞ்சுளா.. அப்போது முதல் ஹரிஷூடன் மஞ்சுளாவுக்கு தகராறு ஏற்பட்டது.. போலீஸ் வரை புகார் சென்று சமாதானம் ஆகியும்கூட, தகராறு தீரவில்லை.. மேலும், ஹரிஷ் தொடர்ந்து பணம் கேட்கவும், எரிச்சலடைந்த மஞ்சுளா, ஹரிஷை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

ஆண் நண்பர் மோனிஷ்

இதற்காக தன்னுடைய ஆண் நண்பர் மோனிஷூடன் சேர்ந்து, ஹரீஷை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.. கூலிப்படையை தயார் செய்தார்... ரூ.10 லட்சம் பேரம் பேசி, நான்கரை லட்சம் அட்வான்ஸ் தந்தார் மஞ்சுளா..

இறுதியில் கூலிப்படையினருடன் சேர்ந்து ஹரீஷை கொன்றார் மோனிஷ்.. பிறகு, அந்த சடலத்தை போட்டோ எடுத்து மஞ்சுளாவிற்கு அனுப்பி வைத்தார் மோனீஷ்.. இதையடுத்து, மிச்ச பணத்தை மறுநாள் கூலிப்படையினருக்கு தருவதாக மஞ்சுளா சொன்னாராம்.. அதற்குள் போலீசில் சிக்கி விட்டது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஞ்சுளா - முக்கிய பிரமுகர்கள்

மஞ்சுளாவை பொறுத்தவரை, விஐபிகள் பலருடன் நெருக்கமாக இருந்திருக்கிறாராம்.. அதில் பல முக்கிய பிரமுகர்களின் போன் நம்பர்களை மஞ்சுளா வைத்துள்ளார்.. அந்த போன் நம்பர்களை காட்டி, அவர்கள் எல்லாருமே தன்னுடைய கஸ்டமர்கள் என்று சொல்லி வந்ததுடன், எங்கெல்லாம் சிக்குகிறாரோ, அங்கெல்லாம் அந்த முக்கிய பிரமுகர்களின் பெயரை சொல்லியும் தப்பி வந்துள்ளார்.

இப்போது மஞ்சுளாவும், ஆண் நண்பர் மோனிஷூம் கைதாகி உள்ளனர். அத்துடன், கூலிப்படையை சேர்ந்த 9 பேர் ஹரீஷ் கொலையில் சிக்கி உள்ளனர்.. மற்றவர்களை தேடி வருகிறார்கள்.. இதில் சென்னத்தூர் ரியல் எஸ்டேட் அதிபர் முரளி என்பவர் பெயரும் அடிபடுகிறது.. காரணம், இவர்தான், ஹரீஷை கண்காணித்து கூலிப்படைக்கு தகவல் சொன்னாராம்.. மஞ்சுளாவிடம் தொடர் விசாரணை நடக்கிறது.. இதில் பல பிரமுகர்கள் சிக்கலாம் என்றும் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+