Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி கமாண்டர்..போலி என்சிசி முகாம்! வேறு பள்ளிகளிலும் வேலையை காட்டிய சிவராமன்? அதிர வைக்கும் பின்னணி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் போலி என்சிசி பயிற்சி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிவராமன் குறித்த பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் வேறு சில பள்ளிகளிலும் சிவராமன் போலி என்சிசி பயிற்சி அளித்து மாணவிகளிடம் அத்துமீறியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர் போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியான என்சிசி முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் 19 மாணவிகள் கலந்து கொள்ள நிலையில் அதனை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த சிவராமன் நடத்தி இருக்கிறார்.

krishnagiri NCC crime

ஆனால் அவர் நடத்தியது என்சிசி முகாமே அல்ல.. அவரும் என்சிசி பயிற்சியாளர் அல்ல என பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் கிருஷ்ணகிரியில் சிவராமன் நடத்தியது என்சிசி பயிற்சி முகாம் அல்ல அதுபோன்ற எந்த நிகழ்வையும் நாங்கள் நடத்தவில்லை என என்சிசி தமிழக தலைமையகம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று அதிகாலையில் மாணவி ஒருவரை தனது அறைக்கு தனி அழைத்த சிவராமன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அவரிடம் அத்துமீறி இருக்கிறார். தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இது குறித்து வெளியே சொன்னால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என பள்ளியின் முதல்வர் சந்தோஷ்குமார், தாளாலர் சாம்சன் ஆகியோர் கூறியிருக்கின்றனர்.

இதனால் பயந்து போன அந்த மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டுக்கு சென்றிருக்கிறார். தொடர்ந்து வீட்டில் அவர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தனிமையில் அந்த மாணவி இருந்த நிலையில் இது குறித்து பெற்றோர் கேட்டதை அடுத்து தான் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரத்தை அந்த மாணவி பெற்றவுடன் தெரிவித்தார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கோவையில் தலைமறைவாக இருந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். போலீசார் சிவராமனை கைது செய்ய சென்றபோது அவர் தப்பிவிட முயன்றதாகவும் இதனால் அவருக்கு காலில் மாவு கட்டு போட்டுள்ளதாகவும் கூறினர். இந்நிலையில் சிவராமன் குறித்து பல பகிர் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி மட்டுமல்லாது முகாமில் கலந்து கொண்ட 13 மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே பல பள்ளிகளில் இதேபோல முகாம் நடத்துகிறேன் என்ற பெயரில் சிவராமன் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார். கிருஷ்ணகிரி மற்றும் பருகூரில் இதேபோல போலியான என்சிசி முகாம்களை சிவராமன் நடத்தியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் சார்பு ஆய்வாளர் ஒருவரை என்சிசி கமாண்டர் எனக் கூறி நம்ப வைத்து இந்த பயிற்சி முகாம்களை நடத்தி இருக்கிறார். இதன் மூலம் பண மோசடி மட்டுமல்லாது பாலியல் வன்கொடுமை சம்பவத்திலும் சிவராமனும் அந்த நபரும் ஈடுபட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் சிவராமனின் நண்பர்கள் இருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எந்தவிதமான உரிய ஆவணங்களும் இன்றி பள்ளிக்குள் என்சிசி முகாம்களை நடத்த அனுமதித்தது எப்படி என பள்ளி நிர்வாகங்களில் விளக்கம் கேட்டதோடு அவர்களிடம் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் சிவராமன் எந்தெந்த பள்ளிகளில் என்சிசி முகாம்களை நடத்தினார் அதற்கு அனுமதி தரப்பட்டது எப்படி? அதில் கலந்து கொண்ட மாணவிகளின் எண்ணிக்கை, அவர்களின் விவரங்களை சேகரித்து வரும் போலீசார், மாணவிகளை தனியே அழைத்து விசாரணை நடத்த இருக்கின்றனர். பின்னாட்களில் சிவராமன் குறித்து மேலும் பல அதிர வைக்கும் தகவல்களும் குற்றப் பின்னணியும் வெளியாகும் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+