வியட்நாம் டீச்சரை கரம்பிடித்த ஓசூர் பைலட்.. நம்ம ஊர் கல்யாணத்தை பார்த்து மணப்பெண் சொன்ன ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஓசூரை சேர்ந்த பைலட் ஒருவருக்கும், வியட்நாம் நாட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியைக்கும் நடந்த காதல் திருமணம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது... ஜப்பானிய மொழி கற்கும் ஆர்வத்தில் ஹலோ டாக் ஆப் மூலம் அறிமுகமான 2 பேரும், ஒரு வருட பழக்கத்துக்கு பிறகு, தற்போது கல்யாணம் செய்து கொண்டுள்ளனர். வியட்நாமிலிருந்து இந்தியா வந்த பெண், இப்போது இங்கேயே படித்து வேலை செய்யவும் விரும்புகிறாராம்.. நம்ம ஊரைப் பற்றி, கல்யாண பெண் என்ன சொல்கிறார் தெரியுமா?

ஓசூர் தேர்ப்பேட்டை மின்நகரை சேர்ந்த பச்சமுத்து - குறிஞ்சி தம்பதியரின் மகன் கார்த்திகேயன். 33 வயதாகிறது.. இவர் தனியார் விமான நிறுவனத்தில் பைலாட்டாக வேலை பார்க்கிறார்..

Vietnamese Teacher Marries Hosur Pilot

இவருக்கும் வியட்நாம் நாட்டை சேர்ந்த ட்ரியூ வான் நோம் - டியெப் தி சென் தம்பதியரின் மகள் ட்ரியூ தி ங்கன் (23) என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ட்ரியூ தி ங்கன் வியட்நாமில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார்.

ஹலோ டாக் ஆப்-ல் ஆரம்பம்

கார்த்திகேயனுக்கும், ட்ரியூ தி ங்கனுக்கும் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.. அதனால் 2 பேருமே "ஹலோ டாக்" ஆப்பை பயன்படுத்திஇ, ஜப்பான் மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.. அப்போதுதான் இவர்களது நட்பும் வலுவடைந்துள்ளது.. மாறி மாறி போனில் பேசி, பிறகு வீடியோ காலில் பேசி, கடைசியில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துவிட்டது.

ஒரு வருடமாக போனிலேயே பேசி வந்திருக்கிறார்கள்.. அதற்கு பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த ஜூன் மாதம் வியட்நாமிலிருந்து இந்தியா வந்தார் ட்ரியூ தி ங்கன்.. காதலன் கார்த்திகேயனையும் நேரில் சந்தித்துள்ளார்... கல்யாணத்தை பற்றி 2 பேரும் பேசியிருக்கிறார்கள். தங்களது விருப்பத்தை, வீட்டுப் பெற்றோர்களிடமும் சொன்னார்கள்.

வியட்நாம் பெண்ணை கல்யாணம் செய்ய விரும்புவதாக கார்த்திகேயன் முதலில் சொன்னதுமே, அவரது பெற்றோர் தயக்கம் காட்டினார்கள். ஆனால், மகனின் ஆழமான காதலை பார்த்ததுமே, திருமணத்துக்கு உடனே ஓகே சொல்லிவிட்டார்களாம்.

இதையடுத்து கடந்த 13ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஸ்ரீ அருணகிரிநாதர் திருக்கோயிலில் கார்த்திகேயன் - ட்ரியூ தி ங்கன் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

பாஸ்போர்ட் சிக்கல்

ஆனால், மணமகளின் பெற்றோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.. ஏனென்றால் பாஸ்போர்ட் இல்லாததால் இந்தியாவுக்கு வர முடியவில்லையாம்..

இந்த திருமணம் குறித்து கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "வியட்நாம் பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டேன்.. முதலில் தயங்கினார்கள். பிறகு, "இது உனது வாழ்க்கை உனது விருப்பம்" என்று சொல்லி, திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்து விட்டனர்.

எனது மனைவி ட்ரியூ தி ங்கன் குடும்பத்தினர், விவசாயம் செய்து வருகிறார்கள்.. பாஸ்போர்ட் கிடைக்காததால், அவர்களால் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை வியட்நாமில் தனியார் பிரைமரி பள்ளி ஆசிரியராக ட்ரியூ தி ங்கன் வேலை பார்க்கிறார்.. மாதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.. கல்யாணத்துக்கு பின் அவர் இந்தியாவில் மேல்படிப்பு படிக்க உள்ளார்" என்று மகிழ்ந்து கூறுகிறார்.

வியட்நாட் மணமகள் பூரிப்பு

திருமணம் குறித்து வியட்நாம் மொழியில் பேசிய ட்ரியூ தி ங்கன், "ஒரு வருடமாகத்தான் இருவரும் பழகினோம் அதன் பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.. இப்போது திருமணமும் செய்து கொண்டோம்.. வியட்னாமில் திருமணங்கள் 4 மணி நேரம் அல்லது அதிகபட்சமாக ஒரு நாள் மட்டுமே நடைபெறும் .. ஆனால் இந்தியாவில் நடைபெற்ற திருமணம் எனக்கு ஆச்சரியத்தை தந்துவிட்டுது. பிரமாண்டமாக இருந்தது.. பல சடங்குகள் நடைபெற்றன.. நிறைய உறவினர்கள் கலந்து கொண்டார்கள்..

கார்த்திக்குடன் காதல்

எதிர்காலத்தில் நான் இந்தியாவிலே வேலை செய்ய விரும்புகிறேன்.. மேல்படிப்பு படிக்கவும் ஆசைப்படுகிறேன் இந்தியாவில் சிறந்த துறவிகள் இருப்பதால் அவர்களை நேரில் சந்தித்து ஆன்மீக கருத்துக்களை ஆராய விரும்பினேன்.. அந்த வகையில் இந்தியா எனக்கு பிடித்த நாடாகவும், கார்த்திக்கை சந்திப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.. அதைவிட முக்கியமாக, கார்த்திக்குடன் உண்மையான, உறுதியான காதல் உறவில் இருக்க விரும்பினேன். அதுக்காகவே எனது தாய்நாட்டை விட்டு, விட்டு இந்தியா வந்துள்ளேன்" என்கிறார்.

ஆக, ஜப்பான் மொழியை கற்றுக்கொள்ளப்போய் ஆரம்பித்த இந்தப் பழக்கம், 2 நாட்டை சேர்ந்தவர்களையும் இன்று திருமணத்தில் இணைத்துள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+