கிருஷ்ணகிரியில் மச்சினிச்சி உடன் அப்படி.. காதலர் தினத்தில் கணவன் செய்த வேலை .. அதிர வைத்த மனைவி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மச்சினிச்சியுடன் கணவர் முறை தவறிய உறவு வைத்திருப்பதை அறிந்த மனைவி விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
கள்ளக்காதல் பொதுவாக சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முறை தவறிய உறவுகள் பெரும்பாலும் கொலை அல்லது தற்கொலையில் முடிகின்றன. அபூர்வமாகவே இவை எதுவும் நடக்காமல் கடந்து செல்லப்படுகிறது. நகர்புறங்களைவிட கிராமப்புறங்களில் திருமணத்தை மீறிய உறவுகள் அம்பலமான உடன் அசிங்கமாக நினைக்கும் பலர், அதனை நினைத்து விபரீத முடிவெடுக்கிறார்கள்..

ஒன்று தங்களை அழிக்கிறார்கள்.. அல்லது தங்கள் துணையை அழிக்கிறார்கள்.. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்கள் துணையை அழிக்கவோ அல்லது தங்களை அழிக்கவோ துணிந்துவிடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவருக்கும் தருமபுரி மாவட்டம், எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருடைய மகள் சந்தியா என்பவருக்கும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பெற்றோர் நிச்சயப்படி கல்யாணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சந்தியாவின் கணவர் குமரன், சந்தியாவின் தங்கையான 20 வயது பெண் கௌசல்யாவை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். , சித்தி என்ற முறையில் கௌசல்யா குழந்தையைக் கவனித்து வந்திருக்கிறார். அப்போது மச்சினிச்சியையும் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார் குமரன் மனைவியின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்காவிற்கு தெரியாமல் தங்கையும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்துள்னர். ஒரு கட்டத்தில் மனைவிக்குத் தெரியாமல் அவரது தங்கை உடன் குமரன் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகித்த மனைவி சந்தியா, கணவரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்துள்ளார். இதில், தனது உடன் பிறந்த சகோதரியே தனக்கு துரோகம் செய்ததைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். இதனால வேதனையில் இருந்த அவருக்கு பிப்ரவரி 14ம் தேதி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று, குமரன் தனது மனைவியான சந்தியாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை.. ஆனால் தங்கை கௌசல்யாவுடன் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியிருக்கிறார் இதனைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து, அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்துள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (மார்ச் 4) மாலை சந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, சந்தியாவின் தாயார் பச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்தியா கொடுத்த வாக்குமூலம் மற்றும் குமரனின் செல்போனில் இருந்த ஆதாரங்களைக் கொண்டு, காவல்துறையினர் குமரனை கைது செய்தனர். அவரை பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியோடு மச்சினிச்சியையும் தன் வலையில் வீழ்த்திய குமரன் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்..
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications