ஆளுநர் டூ அமித்ஷா.. ராணுவ வீரர் மரணத்தில்.. திமுகவிற்கு எதிராக அண்ணாமலையின் அரசியல் மூவ்.. பின்னணி!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை விவகாரத்தில் திமுகவிற்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அரசியல் எப்படி நகர்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை ஆளுநரிடம் கொண்டு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்ததாக அமித்ஷாவிடம் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார். இதன் பின்னணி என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர்நகரில் ஏற்பட்ட பிரச்சனையில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

பிரபுவின் குடும்பத்துக்கும் அதேபேகுதியை சேர்ந்த திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை மிகப்பெரிய மோதலாக மாறி, கடைசியில் கொலையாகவும் முடிந்தது.

பொய்யான தகவல்

பொய்யான தகவல்


இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன், உள்பட சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தனர். இதனிடையே நெருங்கிய உறவினர்களான சின்னசாமி மற்றும் பிரபு இடையே ஏற்பட்ட மோதலை இணையத்தில் பல்வேறு தரப்பினர் பொய்யான புகார்களை, வதந்திகளை பரப்பி வந்தனர். இதையடுத்து இந்த மரணம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கையும் விடுத்தார்,

முன்னாள் ராணுவத்தினர்

முன்னாள் ராணுவத்தினர்

இதனிடையே ராணுவ வீரர் பிரபு கொலை விவாகரத்தை கையில் எடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அப்போதே திமுக கவுன்சிலரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ராணுவ வீரர் கொல்லப்பட்டதிற்கு எதிராக போராட்டத்தையும் பாஜக நடத்தும் என அறிவித்தார். இதன்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், ராணுவ வீரரின் உயிரிழப்புக்கு எதிராக சென்னையில் முன்னாள் ராணுவத்தினரின் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

15லட்சம் ஓட்டு இருக்கு

15லட்சம் ஓட்டு இருக்கு

இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது, " ராணுவத்தினருககு வட இந்தியாவில் கொடுக்கப்படும் மரியாதை தமிழகத்தில் கொடுக்கப்படுவது இல்லை என்று சொல்வார்கள். அது பொய். ஒரு கட்சிதான் மரியாதை கொடுக்கவில்லை, அந்தக் கட்சியை சார்ந்து இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் தான் மரியாதை கொடுக்கவில்லை. நேரடியாக ராணுவத்திலிருந்து ஒய்வுபெற்று இன்று தமிழகத்தில் வசிக்கக்கூடிய வீரர்கள் இரண்டு 2 லட்சத்து 38 ஆயிரத்துக்கு மேற்பட்டவங்க இருக்குறாங்க.. ஒருத்தருக்கு 5 ஓட்டுனு கணக்கு போட்டீங்கன்னா 15 லட்சம் ஓட்டு வந்துருச்சு. யாராச்சும் ராணுவத்துக்கு நான் ஆதரவு தர மாட்டேன், நான் திராவிட கட்சி, ஓட்டை கணக்கு பார்த்து தான் ஆதரவு தருவேன்னு நினைச்சா, 15 லட்சம் ஓட்டு இவங்க கிட்ட இருக்கு, இவங்க ஒருத்தர் போயிட்டு 10 ஓட்டு வாங்கி கொடுத்தா கூட அது ஒன்றரை கோடி. அதனால் எல்லா கட்சிகளுக்கும் நான் சேர்த்து சொல்கிறேன், எங்களுடைய சித்தாந்தத்துக்கு எதிரான கட்சியாக இருந்தாலும் கூட நம்முடைய ராணுவ வீரர்களுக்காக எங்களோடு இணைந்து செயல்படுங்கள்" என்றார். அத்துடன் கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு பிரபுவின் பாஜக சார்பாக 10 லட்சம் ரூபாய் காசோலையை அவருடைய மனைவியிடம் கொடுக்கிறோம் என்றும் அவரின் இரண்டு குழந்தைக்கும் காலத்துக்கும் படிக்க வைக்கக்கூடிய பொறுப்பை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.

ராஜ்பவன் ட்வீட்

ராஜ்பவன் ட்வீட்

உண்ணாவிரதம் முடிந்ததை தொடர்ந்து மாலையில் சென்னை ஓமந்தூரார் மருந்துவமனையில் இருந்து போர்நினைவு சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது, ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக புகாரும் அளித்தார். இது தொடர்பாக ராஜ்பவன் தனது ட்விட்டர் பதவில், ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ஏன்

அரசியல் ஏன்

ஆளுநரை சந்தித்த கையோடு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அண்ணாமலை இன்று சந்திக்கிறார். அப்போது ராணுவ வீரர் கொலை விவகாரத்தில் திமுக குறித்து புகார் அளிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராணுவ வீரர் கொலையை கையில் எடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதை வைத்து ராணுவ வீரர்களுக்கு எதிரான கட்சி திமுக என்று மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. அதிமுகவைவிட திமுகவிறகு அரசியல் ரீதியாக பல்வேறு வகையில் நெருக்கடிகளை கொடுத்து வருவது பாஜக, ராணுவ வீரர்கள் மத்தியில் திமுகவின் மதிப்பை டேமேஜ் செய்யவேத இந்த அரசியல் செய்வதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+