Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோகிணி தியேட்டர் இருக்கைகளை லியோ ரசிகர்கள் உடைச்சுட்டாங்களே.. நிருபர் கேள்விக்கு ஓனர் பதிலை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோகிணி தியேட்டரில் லியோ டிரைலர் வெளியான போது அங்கு விஜய் ரசிகர்கள் தியேட்டர் இருக்கைகளை உடைத்த சம்பவம் குறித்து தியேட்டர் ஓனரிடம் கேட்ட போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகியுள்ளது. இது வரும் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு இசை அனிருத். இதில் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ்மேனன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Leo trailer Rohini Theatre Owner says about his theatre damaged by Vijay fans

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடப்பதாக இருந்து ரத்தாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பிரச்சினை எழுந்த போது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கழுகு, காக்கா கதை சொல்லியிருந்தார். மேலும் இதில் யார் காக்கா, கழுகு என ஆராய வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு விஜய் எப்போது பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.இசை வெளியீட்டு விழாவில் விஜய் நிச்சயம் காக்கா,கழுகு கதைக்கு பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விழா திடீரென ரத்தானது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் லியோ டிரெய்லர் ரிலீஸானது. இந்த டிரைலர் அறிவிப்பு வெளியானதுமே ரோகிணி திரையரங்கில் வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.

Leo trailer Rohini Theatre Owner says about his theatre damaged by Vijay fans

இதையடுத்து திரையரங்க நிர்வாகமும் ரூ 10 கட்டணம் என வசூலித்து 3000 பேருக்கு டிக்கெட் கொடுத்தது. இந்த டிரைலர் ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒரே விசில் துள்ளல் என கொண்டாடினர். ஒரு கட்டத்தில் இருக்கைகளின் மேல் நின்று கொண்டு குதிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் இருக்கைகள் உடைந்துவிட்டன.

தியேட்டருக்குள் ஒரே கலவரமாக இருந்தது. மெயின் ஸ்கிரீனில் 75 சதவீதம் இருக்கைகள் சேதமடைந்தன. 10 ரூபாய் டிக்கெட்டுக்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் சேதாரத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தியேட்டர் ஓனர் பன்னீர் செல்வத்திடம் பாலிமர் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அதை விடுங்க தம்பி! டிரைலர் நல்லா இருந்துச்சா, சூப்பரா இருந்துச்சுல்ல என பேசி நிருபருக்கு அதிர்ச்சி கொடுத்தாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+