"100 நாள் இருமல்" நாடு முழுவதும் பரவும் தொற்று நோய்.. இங்கிலாந்து மக்களுக்கு சுகாதாரத்துறை வார்னிங்
லண்டன்: இங்கிலாந்தில் 100 நாள் இருமல் எனும் தொடர் இருமல் நோய் வேகமாக பரவி வருகிறது. பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் இந்த நோய் கடந்த ஆண்டை விட 250 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி மக்களை பாடாய் படுத்திய கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று நோய் தற்போதுதான் விலக தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் அலை அலையாய் மருத்துவமனைகளை நோக்கி ஓடியதையும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் போட்ட கட்டுப்பாடுகளால் மிகக்கடுமையான இன்னல்களுக்கு ஆளானதையும் தனியாக சொல்லி தெரியவேண்டியது இல்லை.

2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வைரஸ் பாதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தை மக்கள் இப்போதுதான் மறக்க தொடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் தற்போது பயண கட்டுப்பாடுகள் இன்றி கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட முடக்கம் முற்றிலும் ஒழிந்து இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.
அறிகுறி என்ன: இந்த நிலையில்தான் தற்போது இங்கிலாந்தில் பரவும் தன்மை கொண்ட நோய் ஒன்று பரவி வருகிறது. பாக்டிரியாவினால் ஏற்படும் இந்த பாதிப்பு காரணமாக மூன்று மாதங்கள் அதாவது 100 நாள் வரை இருமல் நீடித்துக் கொண்டே இருக்குமாம். இங்கிலாந்தில் இந்த பாக்டிரியா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. 250% நோய்த்தொற்று உயர்ந்துள்ளது. முதலில் சளி பாதிப்பு அறிகுறியுடன் ஆரம்பிக்கும் இந்த நோய், பின்னர் தீவிர இருமலில் வந்து நிற்கும்.
மூன்று மடங்கு அதிகம்: இந்த இருமல் மூன்று மாதங்கள் மக்களை பாடாய் படுத்தும் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை முதல் நவம்பர் வரையில் இதுவரை 716 பேருக்கு இந்த பாக்டிரியா பாதிப்பு கண்டறிய்ப்பட்டு இருப்பதாகவும் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதாரத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் அதிக அளவில் இந்த பாக்டிரியா தொற்றுக்கு பலியாகி வந்ததாகவும் 1950 ஆம் ஆண்டு தடுப்பூசி கண்டறியப்பட பிறகு இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்பு பாதியாக குறைந்து இருப்பதாகவும் இங்கிலாந்து சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. போர்டெட்லா பெர்டுஸ்சிஸ் பாக்டிரியா என்ற நோயால் இது பரவுகிறது. இந்த தொடர் இருமல் நோயால் குழந்தைகள் மட்டும் இன்றி வயது வந்த பெரியர்களுக்ம் பாதிக்கப்படு இருப்பதாக கூறப்படுகிறது.
மூச்சு விடுவது கடினம்: இந்த இருமல் நோய், குடல் இறக்கம், விலா எலும்பில் பாதிப்பு, காதில் தொற்று, சிறுநீரை அடக்க முடியாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தேசிய இன்ஸ்டிடியூட் அலர்ஜி மற்றும் தொற்று நோய் பிரிவு, நாட்டில் அதிகம் பரவும் இந்த இருமல் நோய் பற்றி கூறுகையில், மூச்சு விடுவது கடினமாக இருக்கும்.
வாந்தி மற்றும் புண்கள், விலா எலும்பு முறிவு போன்றவையும் ஏற்படலாம். whooping cough என்று சொல்லப்படும் இந்த தொடர் இருமல் நோயை தடுக்க தடுப்பூசிகள் இருப்பதாகவும் குழந்தைகளை நோய்தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் எனவும் இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications