ஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    போலீஸ் என்னை கைது செய்ய வேண்டும்-பாட்டியின் ஆசை-வீடியோ

    லண்டன்: இங்கிலாந்தில் முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரை கைது செய்து போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

    இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 20ம் தேதி உலக மகிழ்சசி தினம் கொண்டாடப்பட்டது.

    104-Year-Old Woman To be arrested for a very unorthodox her wish

    அன்று முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் ஆசையை நிறைவேற்ற இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது. இதையடுத்து முதியவர்கள் தங்கள் ஆசைகளை துண்டு சீட்டில் எழுதி, அதற்கென தொண்டு நிறுவனம் வைத்திருந்த பெட்டியில் போட்டு உள்ளனர்.

    அதில் 'ஆன் ப்ரோக்ன்ப்ரோ' என்ற 104 வயது பாட்டி, நான் வாழ்நாளில் ஒருமுறை கூட சட்டத்தை மீறி நடந்தது இல்லை, எனினும் என்னை ஒருமுறையாவது போலீசார் கைது செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை எழுதியுள்ளார்.இதனை பார்த்து வியப்படைந்த தொண்டு நிர்வாகிகள், போலீசாரிடம் 104 வயது பாட்டியின் ஆசையை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

    104-Year-Old Woman To be arrested for a very unorthodox her wish

    இதனை கேட்டு முதலில் ஆச்சர்யப்பட்ட போலீசார் 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர். இதன்படி முதியோர் இல்லம் வந்த போலீசார், சிறந்த குடிமகளாக இருந்த குற்றத்துக்காக 'ஆன் ப்ரோக்ன்ப்ரோ' பாட்டியை விலங்கு போட்டு கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் கொண்டுவந்து முதியோர் இல்லத்திலேயே அந்த பாட்டியை விட்டுவிட்டு சென்றனர். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வால் முதியோர் இல்லம் கலகலத்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+