Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு நாள் நைட்..கன்னி தன்மையை விற்ற பெண்! 18 கோடிக்கு வாங்கிய ஹாலிவுட் நடிகர்..இது லிஸ்ட்லயே இல்லையே!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: தனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பணம் தேவை என்பதால் தனது கன்னித் தன்மையை ஏலம் விட்டு 18 கோடி ரூபாய் சம்பாதித்து உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று இருக்கிறார் இளம் பெண் ஒருவர். ஆன்லைன் மூலம் நடந்த ஏலத்தில் அவரது கன்னித்தன்மையை ஹாலிவுட் நடிகர் ஒருவர் ஏலத்தில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

21 ஆம் நூற்றாண்டு நடைபெற்று வரும் நிலையில் அதில் கால் பகுதி கடந்து விட்டது. அதற்குள்ளாக பல மாற்றங்களை இந்த உலகம் சந்தித்து வருகிறது. குடும்பம், சமூகம் சார்ந்த விஷயங்கள் மாறுதலை சந்தித்ததோடு, லிவிங் டு கெதர், என்ஜாய் வித்தவுட் ரெஸ்பான்சிபிலிட்டி என பல உறவு முறைகள் வந்துவிட்டது.

world london Auction

அதனால் பல சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர் இளைஞர்கள். இந்த நிலையில் எல்லாவற்றிற்கும் மேலாக தனது கன்னித் தன்மையை விற்பனை செய்து உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளதோடு சமூக வலைதளத்திலும் மிகப்பெரிய விவாதத்தை உண்டு செய்து இருக்கிறார் 22 வயதான இளம் பெண். இங்கிலாந்தின் மான்செஸ்டரை சேர்ந்த 22 வயதான லாரா தனது கன்னித்தன்மையை ஆன்லைன் மூலம் ஏலத்தில் விட்டு 18 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே எஸ்காட் ஏஜென்சியில் இதற்காக அவர் விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து பல நிகழ்வுகளில் அவர் பங்கேற்ற நிலையில் ஏராளமான ஏலதாரர்கள் கலந்து கொண்டு அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டு இருக்கின்றனர். பல மாதங்கள் கழித்து ஹாலிவுட் நடிகர் ஒருவர் உச்சபட்சமாக 1.7 மில்லியன் யூரோக்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய்க்கு அந்த இளம் பெண்ணின் கன்னித் தன்மையை ஏலத்தில் எடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள லாரா நான் மதம் சார்ந்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்தான். இருந்த போதும் இது குறித்து நான் ஒரு துளி கூட கவலைப்படவில்லை. எனது பிற்கால பாதுகாப்புக்காக இது போன்று செய்வதில் எந்தவித அச்சமும் இல்லை. இதற்கு நான் வருந்தவும் இல்லை. இதனை பிராக்டிக்கலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏராளமானோர் எந்தவித லாபமும் இன்றி தங்கள் கன்னித்தன்மையை இழந்து இருக்கிறார்கள். ஆனால் நான் எனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தான் இதுபோல செய்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

லாராவின் கன்னித் தன்மையை ஏலம் எடுக்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக கடும் போட்டி நிலவி இருக்கிறது. சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் ஏலத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த நிலையில் கடும் போட்டிக்கு பிறகு லாஸ் ஏஞ்சலை சேர்ந்த உலகம் முழுவதும் தெரிந்த ஒரு ஹாலிவுட் நடிகர் அந்த ஏலத்தை எடுத்து இருக்கிறார். இந்த போட்டியில் இறுதி வரை லண்டனை சேர்ந்த ஒரு அரசியல்வாதியும், துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் கடும் போட்டி அளித்திருக்கின்றனர்.

இறுதியில் அந்த ஹாலிவுட் நடிகர் தான் வெற்றி பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஒப்பந்தத்தின்படி அந்த நடிகருடன் லண்டனில் இருக்கும் மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் இளம் பெண் தங்க வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தின் படி மருத்துவ பரிசோதனையில் அவர் தனது கன்னித் தன்மையை நிரூபித்த பின் அவருக்கு அந்த பணம் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

தான் கன்னித்தன்மை இவ்வளவு விலைக்கு போகும் என்று எதிர்பார்க்கவில்லை எனக் கூறியிருக்கும் லாரா, இந்த முடிவு எடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒருவருடன் பழகுவது எனக்கு இனிமையான விஷயம். எனது குடும்பம் வறுமையில் இருக்கிறது. அதற்காக அதிக பணம் தேவைப்பட்டது. இதற்கு பிறகு வேறு ஒருவருடன் எனது வாழ்க்கை தொடருமா என எனக்கு தெரியாது. ஆனால் வருங்காலத்தில் எனது வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என கூலாக பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் இவ்வளவு தொகை கொடுத்து அந்த பெண்ணை வாங்கியது யார் என்ற விவரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் யார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+