நெஞ்சே பதறுதே..நடுக் கடலில் மோதி தீப்பிடித்த கப்பல்கள்! உடல் கருகி உயிரிழந்த ஊழியர்கள்.. ஷாக் வீடியோ
லண்டன்: இங்கிலாந்து அருகே நடுக் கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் மோதி தீ பிடித்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். நடுக் கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலின் பக்கவாட்டில் போர்ச்சுகல் சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க எண்ணெய் கப்பலில் மளமளவென தீப்பிடித்து எரியும் நிலையில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக அளவில் எண்ணெய் வர்த்தகத்தில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் இருந்து எண்ணெய் டேங்கர் கப்பல் மூலம் கச்சா எண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவை பல நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் வடக்கு கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் யார்க்ஷையர் கடற்கரைக்கு அருகே இன்று எண்ணெய் டேங்கர் கப்பலும் சரக்கு கப்பலும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் கப்பலில் பயணித்த 32 பேர் உடல் கருகி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் இரண்டு கப்பல்களும் தீப்பிடித்த நிலையில் கப்பல்களை பணியாற்றிய ஊழியர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் பல படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பணி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
தற்போது வெளியாகி உள்ள முதற்கட்ட தகவல் படி போர்த்துகீஸை சேர்ந்த சோலாங் என்ற கண்டெய்னர் கப்பலும் என்ற சிகிச்சை கப்பலும், ஸ்டேனா இமாக்குலேட் என்ற அமெரிக்க டேங்கர் கப்பலும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்த தகவல் வெளியானவுடன் இங்கிலாந்து கடலோர காவல் படை வீரர்கள் அங்கு விரைந்து இருக்கின்றனர்.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஊழியர்கள் சிலர் கடலில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது மீட்பு பணியில் ஹெலிகாப்டர்கள், ஸ்கெக்னஸ், பிரிட்லிங்டன், மேபிள் தோர்ப் மற்றும் கிளீதோர்ப்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.












Click it and Unblock the Notifications