பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று.. புதிய வகை கொரோனாவா?
லண்டன்: லண்டனில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் புதிய வகை உருமாற்றம் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் 70 சதவீதம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அது போல் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான சேவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அது போல் பிரிட்டனில் இருந்து இன்று இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து நேற்று இரவு 266 பேர் டெல்லி வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர்களிடம் எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் தேசிய நோய் தடுப்பு மையத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் அது புது வகை வைரஸா என்பது தெரியவரும். 5 பேரும் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவில் யாருக்கும் புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா, பாகிஸ்தான், போலாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், ரஷ்யா, ஜோர்டான், பிரான்ஸ், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் துண்டித்தன.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications