லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் பயங்கரம்! ஜெட் வேகத்தில் புகுந்த கார்! பலர் காயம்! அதிர்ந்த பிரிட்டன்
லண்டன்: இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி தொடரில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இந்த அணியினர் லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பு நடந்தினர். அப்போது கூட்டத்திற்குள் ஒரு கார் அசுர வேகத்தில் மோதியது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டி தொடரில் லிவர் பூல் அணி வெற்றி பெற்று அசத்தியது. கால் பந்து தொடரில் வெற்றி பெற்ற அணியினர் லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பு நடத்தினர். இதில் அந்த அணியின் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வெற்றிக்கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஈடுபட்டு இருந்த போது, அங்கு கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியதில் பலர் காயம் அடைந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், காரை முற்றுகையிட்டு காரை ஓட்டி வந்தவரை பிடிக்க முயன்றுள்ளனர். இதனால், காரை ஓட்டிய நபர் மீண்டும் அங்கிருந்தவர்களை கார் மூலம் இடித்துக்கொண்டு சென்றார்.
இதில் பலர்படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், காரை சூழ்ந்து கொண்டு கண்ணாடியை உடைத்து டிரைவரை பிடிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார், அத்துமீறி கூட்டத்திற்குள் காரை ஓட்டிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், தாறுமாறாக காரை ஓட்டி பலர் மீது மோத செய்தவர் 57 வயதான பிரிட்டன் நபர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், " இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. பயங்கரவாத செயலாக இதை கருதவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார். இந்த சம்பவத்தில் சுமார் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில், 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் சிலரது கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இங்கிலாந்தில் கால்பந்து அணியின் வெற்றிக்கொண்டாட்டத்திற்குள் கார் புகுந்து பலரது மீது மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications