70 சிறுமிகள்.. ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள்.. இங்கிலாந்தையே அதிர வைத்த "சிறுவன்" யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சோஷியல் மீடியாவில் ஒரு சிறுவன், கிட்டத்தட்ட 70 சிறுமிகளை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்திருக்கிறான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி பாலியல் ரீதியாக சுரண்டிய இந்திய மாணவருக்கு பிரிட்டனில் 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 70 சிறுமிகள் பாதிக்கப்பட்ட இந்த வழக்கில், போலீஸ் விசாரணையில் தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இதில் இன்னொரு முக்கியமான ட்விஸ்ட்டும் உள்ளது.. அது என்ன தெரியுமா?

இந்தியாவை சேர்ந்தவர் பிலால் காசி.. இவருக்கு 27 வயதாகிறது.. பிரிட்டனில் படித்து வந்திருக்கிறார்.. எப்போதுமே சோஷியல் மீடியாவில் மூழ்கி கிடப்பவர்.. ஸ்னாப்சாட், ரோப்லாக்ஸ், விங்க் என எதையும் விட்டு வைக்க மாட்டார்.. ஆன்லைன் கேமிங் தளங்களிலும் பிஸியாக இருப்பார். இத்தனை தளங்களிலும் பிலால் காசி மூழ்கியிருக்க காரணம், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவது இவருக்கு பிடிக்குமாம்.

UK Crime News Child Sexual Exploitation UK Grooming Scandal

இங்கிலாந்து சிறுவன்

இதற்காகவே தன்னை ஒரு டீனேஜ் சிறுவன் போல காட்டிக்கொண்டார்.. இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும் தன்னுடைய பெயர் ரீஸ் என்றும் சொல்லி சோஷியல் மீடியாவில் அச்சிறுமிகளிடம் அறிமுகப்படுத்தி கொண்டார்.. அந்த சிறுமிகள் நம்ப வேண்டும் எனப்தற்காக வேறொரு சிறுவனின் போட்டோக்களையும் பயன்படுத்தியுள்ளார்.

முதலில் சிறுமிகளிடம் நட்பாகப் பழகிய பிலால், பின்னர் காதலிப்பதாகக் கூறி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அவர்களும் உண்மையாகவே தங்களுடன் ஒரு சிறுவன் பழகுவதாக நம்பியுள்ளனர்.

ஆபாச வீடியோக்கள்

இதையடுத்து சிறுமிகளிடம் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை கேட்டுப் பெற்றுள்ளார். சில சிறுமிகளை பாலியல் செயல்களை வீடியோவாக பதிவு செய்யவும் கட்டாயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, போட்டோக்களை அனுப்ப மறுத்த சிறுமிகளை மிரட்டியுள்ளார். ஏற்கனவே அனுப்பிய படங்களையும் வீடியோக்களையும் மற்றவர்களிடம் ஷேர் செய்து விடுவதாக கூறியுள்ளார். இதனால் பயந்த சிறுமிகள் சிலர் தொடர்ந்து அவரிடம் சிக்கியுள்ளனர்.

கடைசியில் இந்த அக்கிரமம், கடந்த 2021 நவம்பர் மாதம் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. இந்த புகாரை கொண்டு சென்றது 13 வயது சிறுமி ஆவார்.. இவர் பிலாலுடன் ஸ்னாப்சாட் மூலம் பழகியுள்ளார். அப்போது சிறுமியிடமும் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களைக் கேட்டு பிலால் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியபோதுதான், பிலால் பிரிட்டனை விட்டு வெளியேறியது தெரியவந்தது. பிறகு 2023 ஜூலை மாதம் மீண்டும் பிரிட்டனுக்கு வந்தபோது ஹீத்ரோ ஏர்போர்ட்டில் அவரை கைது செய்தனர்.

செல்போனில் அதிர்ச்சி

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து விசாரணையை விரிவுபடுத்தினர். பிரிட்டனின் மட்டும் 70 சிறுமிகளை பிலால் டார்ச்சர் செய்திருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.. அச்சிறுமிகள் அத்தனை பேரும், 11 முதல் 17 வயதை சேர்ந்தவர்கள்.. இந்த வழக்கில் மிகக் குறைந்த வயதுடைய 10 வயது சிறுமியும் அடக்கமாம்.

அவரது செல்போனில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 180 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர்களில் 70 பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது.

நீதிமன்றம் தந்த தீர்ப்பு

இந்த வழக்கில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பிலால் காசி தனது மீதான 37 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தற்போது செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் சிறையிலிருந்து விடுதலையான பிறகு மேலும் 8 ஆண்டுகள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த வழக்கு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் மார்ட்டின் மெக்ராப் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "பிலால் பல சிறுமிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களை ஏமாற்றி பாலியல் செயல்களில் ஈடுபட வைத்துள்ளார். இதற்கு மறுத்த சிறுமிகளை அவர்கள் அனுப்பிய படங்களைக் கொண்டே மிரட்டியுள்ளார். இதனால் பல சிறுமிகள் நீண்ட காலமாக மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+