'சல்யூட்' வெள்ளை உடையால் ஏற்பட்ட சிரமம்..இங்கி.மகளிர் அணியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய நிர்வாகம்
லண்டன்: மாதவிடாய் காலத்தில் வெள்ளை நிற ஷார்ட்ஷுடன் விளையாடுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் ஷார்ட்ஸ் நிறத்தை மாற்ற வேண்டும் என இங்கிலாந்து கால்பந்து மகளிர் அணி வீராங்கனைகள் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஷார்ட்ஸின் நிறத்தை நீல வண்ணமாக மாற்ற அணி நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் மட்டும் இன்றி கால்பந்து விளையாட்டுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்று சொல்லலாம்.
கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சர்வதேச அளவில் கவனம் பெறும் அணியாக உள்ளது.

வெள்ளை நிற ஜெர்ஸி
குறிப்பாக மகளிர் கால்பந்து அணி தரவரிசையில் 4 ஆம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மகளிர் அணிக்கு வெள்ளை நிற சீருடை வழங்கப்பட்டுளது. இந்த சீருடைகளை பிரபல நிறுவனமன நைக் தயாரித்து வருகிறது. வெள்ளை நிற ஜெர்ஸியும் ஷார்ட்சும் அணிந்து இங்கிலாந்து மகளிர் அணி போட்டிகளில் பங்கேற்று வருகிறது. வெள்ளை நிற ஜெர்சியால் மகளிர் அணி வீராங்கனைகள் தங்களின் மாதவிடாய் காலத்தில் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

மாதவிடாய் காலத்தில்
வெள்ளை நிற ஷார்ட்ஸ் உடன் மாதவிடாய் காலத்தில் விளையாடுவதால் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் ஷார்ட்சின் நிறத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக மகளிர் அணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண்கள் கால்பந்து வீராங்கனைகளின் இந்த கோரிக்கையை இங்கிலாந்து மகளிர் கால்பந்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நீல நிற ஷார்ட்ஸ் அணிய
இதன்படி, இனி வெள்ளை நிறத்திற்கு பதிலாக நீல நிற ஷார்ட்ஸ் அணிந்து விளையாட அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இங்கிலாந்து அணி வரும் வியாழக்கிழமை பிரேசில் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியிலேயே நீல நிற ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவதற்கு இங்கிலாந்து மகளிர் அணி ஆயத்தமாகி வருகிறது.

சிரமங்களும் சவால்களும் இருந்தன
இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனைகள் வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக கோரிக்கையை முதலில் முன்வைத்த வீராங்கனை பெத் மீட். தற்போது அணி நிர்வாகம் ஷார்ட்ஸ் நிறத்தை மாற்ற அனுமதி கொடுத்து இருப்பது குறித்து வீராங்கனை பெத் மீட் கூறியதாவது:- வெள்ளை நிறத்திலான ஜெர்சி மற்றும் ஷார்ட்ஸ் நன்றாகவே இருந்தது. அனாலும் மாதவிடாய் காலத்தில் வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிவதில் பல்வேறு சிரமங்களும் சவால்களும் இருந்தன.

வீராங்கனைகள் சிரமப்பட்டனர்
எனவே இதை நாங்கள் இங்கிலாந்து அணிக்கு ஜெர்சி மற்றும் ஷார்ட்ஸ்களை வழங்கி வரும் நைக் நிறுவனத்திடம் எடுத்து சென்றோம். போட்டி காலத்தில் மாதவிடாய் வராமல் தடுப்பதற்கான மாத்திரையையும் சில நேரங்களில் நாங்கள் எடுத்துக் கொண்டு விளையாடிய போதும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை எதிர்கொள்ள சில வீராங்கனைகள் சிரமப்பட்டனர்" என்று கூறினார்.

மகளிர் கால்பந்து கிளப் அணிகளும்
தற்போது வீராங்கனைகளின் கோரிக்கை ஏற்கபட்டு ஷார்ட்ஸ் நிறம் மாற்றப்பட்டு இருப்பதால் இங்கிலாந்து மகளிர் அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து தேசிய அணி மட்டும் இன்றி மான்செஸ்டர் சிட்டி, வெஸ்ட் பிரோம், ஆர்லாண்டே பிரைடு போன்ற மகளிர் கால்பந்து கிளப் அணிகளும் வெள்ளை நிற ஷார்ட்ஸ்களுக்கு பதிலாக வேறு நிற ஷார்ட்ஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications