லண்டனில் ஷாப்பிங்.. எதிரே வந்த பெண்.. அஜித் குமார் செய்த காரியம்.. நெகிழும் ரசிகர்கள்
லண்டன்: லண்டனில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள நடிகர் அஜித்குமார் ஒரு கடையில் பெண் ஒருவர் வந்த போது வழிவிடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் அஜித் தற்போது எச் வினோத்- போனிகபூர் கூட்டணியில் ஏகே61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்த நிலையில் சில நாட்கள் ஷூட்டிங்கிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த படத்தின் மூலம் 3ஆவது முறையாக எச் வினோத்- போனி கபூர் கூட்டணியில் அஜித் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை நடித்துள்ளார்.

ஏகே 61 படம்
ஏகே 61 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்படைந்துள்ளது. ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது டிசம்பர் வெளியீடு என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

லண்டனில் அஜித்
படத்தின் வெளியீடு தள்ளி போனதாலோ என்னவோ ஏகே 61 படத்தின் சூட்டிங்கிலிருந்து விலகி பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அஜித். கடந்த சில தினங்களாக கார், பைக் என லண்டனில் இவர் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலானது. அங்கு சந்திக்கும் ரசிகர்களுடனும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இரட்டை வேடம்
ஏகே 61 இல் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். நீண்ட தாடி, காதில் தோடு என சூப்பரான கெட்டப்பில் ஒரு வேடத்திற்கு நடிக்கும் அஜித், மற்றொரு வேடத்திற்கு வேறு ஒரு கெட்டப்பை போடவுள்ளார். இரண்டாவது வேடத்தின் படப்பிடிப்புகள் லண்டனிலிருந்து அஜித் வந்ததும் தொடங்கும் என தெரிகிறது.

லண்டனில் கடையில் அஜித்
அஜித் லண்டனில் ஒரு கடைக்கு செல்கிறார். அங்கு கேஷியருக்கு கை குலுக்கிவிடுகிறார். பின்னர் ஒரு கார்டை கொடுத்து ஏதோ கேட்கிறார். பிறகு கடைக்கு உள்ளே சென்று எதையோ தேடுகிறார். அப்போது ஒரு பெண் வருவதை கவனிக்கிறார். உடனே அவருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார். இதுதான் அஜித்தின் குணம் என அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். ஏகே61 தான் திரைக்கு வர லேட்டாகுது, ஆனால் அவருடைய சுடச்சுட வீடியோவை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.












Click it and Unblock the Notifications