அஜித்தை பார்த்ததும் ஓடிப் போய் கட்டி அணைத்த முதல்வர் விஜய்.. லண்டனில் தல - தளபதி ரசிகர்கள் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: லண்டன் சில்வர்ஸ்டோனில் கார் ரேஸ் நடைபெறும் இடத்திற்கு வந்த முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி அஜித்குமார் வரவேற்றார். அஜித் குமாரை பார்த்ததும் ஓடி வந்த முதல்வர் விஜய் கட்டி அணைத்து கொண்டார். அவருடன் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் அஜித்குமார் ஆரத்தழுவி வரவேற்றார். விஜய் - அஜித் சந்திப்பினை பார்த்து அங்கு இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், லண்டன் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தையும் விஜய் பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைக்கிறார்.

Ajithkumar warmly welcomed TN CM Vijay Fans are thrilled Thala and Thalapathy show In London

லண்டனில் முதல்வர் விஜய்

தமிழ் திரையுலகின் டாப் நடிகரும் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித்தின் அணியும் இந்த ரேசில் பங்கேற்கிற்கிறது. அஜித் பங்கேற்கும் போட்டியை விஜய் தொடங்கி வைக்க இருப்பது இருவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணியளவில் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியை காண லண்டனில் இருவரது ரசிகர்களும் குவிந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பேருந்துகளில் குழுக்களாக கிளம்பும் வீடியோக்களையும் லண்டனில் உள்ள தமிழர்கள் பதிவிட்டு வருகிறார்கள். லீ மென்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக விஜய், லண்டனில் தான் தங்கியிருந்த சொகுசு விடுதியில் இருந்து புறப்பட்டுள்ளார். விஜய்யை பார்க்க குவிந்து இருந்த ரசிகர்களுக்கு கை அசைத்தபடி வந்த விஜய், அவர்களுக்கு ஆட்டோகிரப்பும் போட்டு கொடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஓடி சென்று கட்டி அணைத்த விஜய்

இதையடுத்து கார் ரேஸ் நடைபெறும் இடத்திற்கு வந்த முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி அஜித்குமார் வரவேற்றார். அஜித் குமாரை பார்த்ததும் ஓடி வந்த முதல்வர் விஜய் கட்டி அணைத்து கொண்டார். அவருடன் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் அஜித்குமார் ஆரத்தழுவி வரவேற்றார். விஜய் - அஜித் சந்திப்பினை பார்த்து அங்கு இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

தொடர்ந்து முதல்வர் விஜய் அங்கு இருந்த ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். இதன் பிறகு முதல்வர் விஜய்க்கு தனது அணியினரை அஜித்குமார் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+