ஆம்புலன்ஸ் ஓட்டுரின் உயிரை காப்பாற்றிய நோயாளி.. விடாமல் 20 நிமிடம்.. நெகிழ வைத்த சம்பவம்
லண்டன்: இங்கிலாந்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்த நிலையில், நோயாளியும் செவிலியரும் இணைந்து தக்க நேரத்தில் காப்பாற்றி உள்ளனர்.
பொதுவாக நோயாளிகளைத்தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் செவிலியர்களுகும் காப்பாற்றியதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கிலாந்தில் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை நோயாளி காப்பாற்றி உள்ளார்.

ஷான் மெக்பிரைட் என்பவர் இங்கிலாந்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் 72 வயதான டாமி ஸ்டீவர்ட் என்பவரை இங்கிலாந்தின் பாஞ்சோரியில் உள்ள க்ளென் ஓ'டீ மருத்துவமனையில் இருந்து அபெர்டீன் ராயல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்.
நோயாளி ஸ்டீவர்ட் எப்படிப்பட்ட நோயாளி என்றால், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒரு கை கால் ஊனமுற்றவர் ஆவார். அவரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செலல்ல முயன்றார். அப்போது திடீரென ஷான் மெக்பிரைடுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்தார்.
இதையடுத்து நோயாளி டாமி ஸ்டீவர்டும், செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோல் அவருக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் வரும் வரை சிபிஆர் செய்து உயிரை காப்பாற்றினர். இதனிடையே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆம்புலன்ஸ் வந்து டிரைவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றது. அபெர்டீன்ஷையரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் விரைவில் குணம் அடைந்தார்.
ஸ்டீவர்ட்டை காப்பாற்றியது குறித்து கூறும் போது, ஆம்புலன்ஸ் ஊழியர் ஷான் மெக்பிரைட், அவரது வாகனத்தில் என்னை பத்திரமாக ஏற்றிக்கொண்டு சென்றார். ஆனால் இருக்கையில் அமர்ந்த போது திடீரென சத்தம் கேட்டது. நான் பார்த்த போது, அவர் சரிந்து விழுந்தார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் ஆவேசமாக கத்தி, அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன்.. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கேண்டீன் ஊழியர் பார்த்துவிட்டார்.
அவர் உடனடியாக செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோலிடம் கூறினார். அவர் ஓடி வந்து பார்த்தார். அவர் உடனடியாக சிபிஆர் சிகிச்சை செய்து ஷான் மெக்பிரைடை காப்பாற்றினார். செவிலியர் ஸ்மித்-நிகோல் 25 நிமிடங்களுக்கு மேல் மெக்பிரைடிக்கு சிபிஆர் செய்தார், ஆம்புலன்ஸ் வரும் வரை உதவினார்.
அவரைக் காப்பாற்றுவதற்காக ஆம்புலன்ஸில் இருந்து ஃபிபிரிலேட்டர் ஏழு முறை பயன்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில் செய்த உதவியால் ஷான் மெக்பிரைடை காப்பற்ற முடிந்தது என்றார். இதனிடையே உயிர் பிழைத்து வந்த ஷழன் மெக்பிரைட் தனக்கு உதவிய நோயாளி ஸ்டீவர்ட் மற்றும் செவிலியர் ஃப்ரேயா ஸ்மித்-நிகோல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தனக்கு மறுபிறவி அளித்ததாக அவர்களை பற்றி தொடர்ந்து கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications