இவங்கதான் சேர போறாங்க.. ஆனா எப்படி சேர போறாங்க?.. அப்படியே குஷி படம் போலவே ஒரு சம்பவம்!

ஒரே ஆஸ்பத்திரி, ஒரே நாளில் பிறந்த குழந்தைகள் 26 வருடம் கழித்து திருமணம் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: "இந்த குழந்தைங்கதான் பின்னால லவ்வர்ஸ்-ஆ ஆக போறாங்க.. இவங்கதான் சேர போறாங்க.. ஆனா எப்படி சேர போறாங்க?"-ன்னு குஷி படத்துல எஸ்ஜே சூர்யா சொல்லுவாரே.. அதே மாதிரி ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.

1992-ம் ஆண்டு.. டிசம்பர் 22ம் தேதி.. லண்டனில் உள்ள விகான் மருத்துவமனை.. இங்கதான் ஒருசில நிமிட இடைவெளியில் பிறந்தார்கள் ஷவுனா கிரேஸி மற்றும் டாம் மாகிர் என்ற இரு ஆண் பெண் குழந்தைகள்.

இருவருக்கும் எந்தவித உறவோ, சம்பந்தமோ, கிடையாது. ஒரே மருத்துவமனை, ஒரே நேரம் பிறந்தவர்கள் என்ற ஒன்றை தவிர வேறு தொடர்பு இல்லை.

பள்ளிப்படிப்பு

பள்ளிப்படிப்பு

குழந்தை பிறந்ததும் வேறு வேறு இடத்துக்கு பயணப்பட்டார்கள். பள்ளிப்படிப்பு தனித்தனியாக முடிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் வயது 18 ஆனது. ஒரு விழாவில் மாறுவேட நிகழ்ச்சிக்காகக் கலந்துகொண்ட போதுதான் இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.

தவிர்த்தார்

தவிர்த்தார்

அப்போது ஷவுனாவை பார்த்தவுடன் டாமுக்கு என்னவோ பளிச்சென பிடித்து விட்டது. அதனால் டாம் தான் ஷவுனாவிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் ஷவுனாதான் பேசவே இல்லையாம். டாம் பேச வந்தால்கூட ஷவுனா அதை தவிர்த்திருக்கிறார்.

காதல் வெற்றி

காதல் வெற்றி

ஆனால் மனசுக்கு பிடிச்ச பெண்ணாயிற்றே.. சுலபத்துல விட்டுட முடியுமா என்ன? அதனால பல கட்ட முயற்சிகளை எடுத்து, ஷவுனாவுக்காக மெனக்கெட்டார். கடைசியில் லவ்தான் ஜெயிச்சது.. ஷவுனாவின் காதலை டாம் பெற்றுவிட்டார்!

ஏகப்பட்ட சந்தோஷம்

ஏகப்பட்ட சந்தோஷம்

இந்த லவ் மேட்டர் எல்லாம் முடிந்து கொஞ்ச நாள் கழித்துதான், ரெண்டு பேரும் ஒரே ஆஸ்பத்திரியில், ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதை யதேச்சையாக தெரிந்து கொண்டார்கள். அதனால் இருவருமே ஏகப்பட்ட சந்தோஷம் அடைந்தார்கள்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இப்போ இந்த லவ் ஜோடிக்கு வயசு 26.. கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பிறந்த சமயத்தில் ஆஸ்பத்திரியில் இருந்தபோது எடுத்த போட்டோ, 26 வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணின போட்டோ.. இது ரெண்டையும் பதிவிட்டுள்ளனர். அனைவருக்குமே இந்த விஷயம் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+