லண்டனில் பெங்களூர் குழு நடத்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.. விசிட் அடித்த ஸ்டாலின்!
பெங்களூர்: 'After the Assembly: Constituting India' என்ற தலைப்பில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அரசியல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பெங்களூரை சேர்ந்த Reclaim Constitution என்ற அமைப்பும் பங்கேற்று அரங்குகளை அமைத்து இருந்தது. இந்த கண்காட்சி அரங்கை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எஸ்.ஓ.ஏ.எஸ் கேலரியில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 'ரீக்ளெயம் கான்ஸ்டிடியூஷன்' (Reclaim Constitution) என்ற அமைப்பு கண்காட்சி அரங்குகளை அமைத்துள்ளது.

அரசியலமைப்புச் சபையின் விவாதங்கள் பற்றிய ஆவணங்கள் மற்றும் பிற காப்பகப் பொருட்களைக் காட்சிப்படுத்தி அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்கள் குறித்த ஏராளமான தகவல்களை நினைவுகூரும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்றது. அரசியலமைப்பு தொடர்பான கலைப்படைப்புகள் உள்ளிட்டவையும் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
இந்த கண்காட்சி அரங்கை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் சென்று பார்வையிட்டார். முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஜெர்மனி மற்றும் லண்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில்தான், இந்த கண்காட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
சாதாரண குடிமக்களும் கடிதம் அனுப்பினர்
இது தொடர்பாக 'ரீக்ளெயம் கான்ஸ்டிடியூஷன்' அமைப்பைச் சேர்ந்த வினய் குமார் கூறியதாவது:- "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அரசியல் நிர்ணய சபையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஈடுபட்டதாக ஒரு எண்ணம் நிலவுகிறது. ஆனால், சாதாரண மக்களும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பங்காற்றியுள்ளனர்.
அரசியல் நிர்ணய சபைக்கு சாதாரண குடிமக்கள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பினர். அவை இங்கே உள்ளன" என்றார். முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து அவர் கூறும் போது, "தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வருகை தந்தார். அவரிடம் நாங்கள் செய்து வரும் பணிகள் குறித்து தெரிவித்தோம்" என்றார்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications