இங்கிலாந்தின் 2வது பெரிய நகரமான பர்மிங்காம் திவால் ஆனது.. எப்படி நடந்தது? அதிர வைத்த உண்மை
லண்டன்: இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவித்துள்ளது.
திவால் நிலைக்கு சம ஊதிய திட்டமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.பர்மிங்காம கவுன்சிலில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது. இதற்கான போதுமான பணம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காம் நகரத்தின் கவுன்சில், கடந்த செப்டம்பர் 5 முதல் திவாலானதாக அறிவித்துள்ளது. அத்தியாவசிய செலவுகளைத் தவிர அனைத்து செலவினங்களுக்கும் பணம் தற்காலிகமாக நிறுததப்பபட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பர்மிங்காம் நகர கவுன்சில், கடந்த செவ்வாய்கிழமை அன்று 114 அறிவிப்பை (திவால் அறிவிப்பு) வெளியிட்டது.
ஏற்கனவே இங்கிலாந்தில் நார்த்ஆம்டான்ஷைர், வோக்கிங் , க்ராய்டன் மற்றும் துராக் உள்ளிட்ட நகர கவுன்சில்கள் அத்தியாவசிய செலவுக்குதவிர வேறுசெலவுக்கு பணம் இல்லை என்று திவால் அறிவிப்பை (114 அறிவிப்பு) வெளியிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்தின் மிகப்பெரிய நகரமான பர்மிங்காம் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பர்மிங்காம் நகர கவுன்சில் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துவிட்ட நிலையில், அந்த நகரத்தின் நிதி சிக்கலை தீர்த்து மீட்பதற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்தலைமையிலான அரசு மறுத்து வருகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் மேக்ஸ் பிளேன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறும் போது, பர்மிங்காம் நகர சபைக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 10 சதவிகிதம் கூடுதல் நிதியை இங்கிலாந்து அரசு வழங்கிவிட்டது. எனவே நகர கவுன்சில் தான் இனி அதன் சொந்த வரவு செலவு திட்டத்தை நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
'அறிவிப்பு 114' என்றால் என்ன?
இங்கிலாந்தை பொறுத்தவரை ஒரு நகராட்சி, தன்னால் செலவை ஈடு செய்யமுடியாத நிலை வந்துவிட்டது என்று கருதிவிட்டால், அந்த நகராட்சி சார்பில் 114 அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் நார்த்ஆம்டான்ஷைர், வோக்கிங் , க்ராய்டன் மற்றும் துராக் ஆகிய இங்கிலாந்து நகரங்கள் ஏற்கனவே பிரிவு 114 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அத்தியாவசியச் செலவுகளைத் தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்படும் என்பதுதான் 114 அறிவிப்பின் பொருள் ஆகும்.

பர்மிங்காம் நகர சபை எப்படி திவாலானது?
திவால் நிலைக்கு சம ஊதிய திட்டமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.பர்மிங்காம கவுன்சிலில் உள்ள பெண் ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்க உத்தரவிட்டது. இதற்கான போதுமான பணம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பர்மிங்காமில் பெண் ஊழியர்களுக்கான சம ஊதியக் கோரிக்கைகளுக்கு £760m வரை செலவாகும் என்று ஜூலை மாதத்தில் மதிப்பிட்டிருந்தது.
ஜூன் மாதம், பர்மிங்காம் நகர கவுன்சில் பெண் தொழிலாளர்களுக்கு 1.1 பில்லியன் பவுண்டுகள் செலுத்தி உள்ளது. ஆனால் இன்னும் 650-750 மில்லியன் பவுண்டுகள் வழங்க வேண்டிய பொறுப்பில் பர்மிங்காம் நகர சபை இருக்கிறது. தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு 5 மில்லியன் பவுண்டுகள் முதல் 14 மில்லியன் பவுண்டுகள் வரையே திரட்டப்படுகிறது. இந்த சூழலில் தான் பர்மிங்காம் நகரம் திவால் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications